5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today Panchangam October 2 2024: இன்று மஹாளய அமாவாசை.. நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் இதோ!

Tamil Panchangam: ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கிரகங்களின் போக்கின் அடிப்படையில் இந்த நேரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை இந்த நேரகாலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தின் நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரம் பார்க்கலாம்.

Today Panchangam October 2 2024: இன்று மஹாளய அமாவாசை.. நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Oct 2024 06:03 AM

இன்றைய பஞ்சாங்கம்: நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு விஷயங்கள் செய்தாலும் ஜோதிட சாஸ்திரத்தின்படி செயல்பட வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. அதாவது பஞ்சாங்க கணிப்பின்படி நல்ல நேரம், எமகண்டம், ராகுகாலம் ஆகியவை பார்த்து செயல்பட வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலையில் 09.15 – 10.15 வரையும் மாலையில் 04.45-05.45 மணி வரையும் உள்ளது. எனவே இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் காலை 7.30 – 9.00 மணி வரையும், ராகு நண்பகல் 12.00 – 01.30 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. அதேபோல, இன்றைய நாள் தங்கம் வாங்க, வெளிநாடு பயணம் மேற்கொள்ள சிறந்த நாளாகும். மேலும் மஹாளய அமாவாசை தினமான இன்று முன்னோர் வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். அது தொடர்பான தகவல்களை காணலாம்.

  1.  நாள் : அக்டோபர் 02 – 2024 | 14 – புரட்டாசி – குரோதி – புதன்கிழமை
  2. நல்ல நேரம் – காலை 9.15 – 10.15 ; மாலை 4.45 -5.45
  3. கௌரி நல்ல நேரம் – காலை 10.45 – 11:45 – மாலை 06:30 – 07:30
  4. ராகு காலம் – மதியம் 12.00 – 01.30
  5. எமகண்டம் – காலை 7.30 – 09.00
  6. குளிகை – காலை 10.30 – 12.00
  7. சூலம் – வடக்கு
  8. பரிகாரம் – பால்
  9. சந்திராஷ்டமம் – இன்று பிற்பகல் 01.44 வரை அவிட்டம் பின்பு சதயம்
  10. நாள் – மேல் நோக்கு நாள்
  11. லக்னம் – கன்னி லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 35
  12. சூரிய உதயம் – காலை 06:02
  13. ஸ்ரார்த திதி – அமாவாசை
  14. திதி – இன்று முழுவதும் அமாவாசை
  15. நட்சத்திரம் – இன்று பிற்பகல் 01.44 PM வரை உத்திரம் பின்பு அஸ்தம்
  16. சுபகாரியம் – முன்னோர் வழிபாடு மேற்கொள்ள, வெளிநாடு பயணம் செல்ல, ஆபரணங்கள் வாங்க நல்ல நாள்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

ஊழியர்களுக்கு பணிச்சுமை, வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வணிகங்கள் லாபப்பாதையில் செல்லும். தொழில் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். பயணங்களில் வாகன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானத்திற்கு சமமான செலவுகள் இருக்கும்.  குடும்பத்தில் தெய்வ காரியம் நடைபெற வாய்ப்புள்ளது.

ரிஷபம்

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்குக் ஏற்ற ஊதியம் இருக்காது. வேலையில் கூடுதல் பொறுப்பு உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சிறிய அளவில் உடல்நல பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

ஊழியர்களுக்கு வேலை அழுத்தம் இருக்கும். அதேசமயம் பணியில் கூடுதல் பொறுப்பு வழங்கப்படும். தொழில், வியாபாரத்தில்  லாபம் உண்டாகும். குடும்ப விவகாரங்கள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். சிறுவயது நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடகம்

வேலையில் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சரியான செயல்பட்டால் லாபம் பெறலாம். சொத்து விவகாரத்தில் உறவினர்களுடன் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. வருமானம் பல வழிகளில் பெருகும். பயணங்களில் சிறிது சிரமத்தை எதிர்கொள்ளும் நிலை உண்டாகும்.

சிம்மம்

ஊழியர்களுக்கு பணியிடங்களில் அந்தஸ்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து, சரியான மாற்றங்களை கண்டு பயனடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வேடிக்கையான பிரச்னை உண்டாகும்.

கன்னி

வேலையில் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வெடுக்க முடியாத சூழல் ஏற்படும். தொழில், தொழில்களில் பெரிய அளவில் லாபம் இருக்காது. முக்கியமான முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். எடுத்த பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுறும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

துலாம்

வேலையில் முக்கியமான வாய்ப்பு கிடைக்கும் நிலை உண்டாகும். தொழில் வாழ்க்கை நன்றாக செல்லும். வணிகங்களில் புதிய  லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்  குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தெய்வ செயல்களில் நம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

தொழில், வேலைகளில் சாதகமாக சூழல் உண்டாகும். வணிகங்களை விரிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். குறுகிய உழைப்புடன் மாணவர்கள் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். உறவினர்களுக்கு சம்பந்தப்பட்ட சுப காரியத்தில் பங்கேற்பீர்கள்.

தனுசு

ஊழியர்கள் பணியிடத்தில் அதிகாரிகளுடன் சமரசமாக செல்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.  தொழில், வணிகத்தில் முக்கிய முடிவுகளை சிந்தித்து செயல்படுத்தவும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உறவினர்களுடனான சொத்து பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.

மகரம்

ஊழியர்களுக்கு பொறுப்பு மாறுவதுடன் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற  பலன்கள் கிடைக்கும். தெய்வ காரியங்களுக்கு  முன்னுரிமை அளிப்பீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் நிலை உருவாகும். பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவை குறைப்பது நல்லது.

கும்பம்

வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். திருமண விஷயத்தில் உறவினர்களிடம் இருந்து முக்கிய தகவல் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்கள் பொறுமை இல்லாவிட்டால் சரிவை சந்திப்பீர்கள். சொத்து வாங்க முயற்சிகள் கைகூடும்.  செலவுகளைக் குறைப்பது நல்லது.

மீனம்

வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் விரும்பிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் உயர்நிலை நபர்களுடன் தொடர்புகள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News