5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today Panchangam 25 August 2024: இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம்.. பஞ்சாங்க விவரம் இதோ!

Rasipalan Today: ஜோதிட ரீதியாக இன்று என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய நட்சத்திர கணிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அந்த நாளை இன்னமும் இனிமையாக தொடங்கலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஞாயிற்றுகிழமை ராசிபலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

Today Panchangam 25 August 2024: இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம்.. பஞ்சாங்க விவரம் இதோ!
பஞ்சாங்கம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 25 Aug 2024 06:00 AM

இன்றைய பஞ்சாங்கம் : ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலையில் 07:45 – 08:45 வரையும், மாலையில் 03:15 – 04:15 உள்ளது.  எனவே, இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் 12.00- 1.30 வரையும், ராகு 04.30 – 6.00 வரை இருப்பதால் சுப காரியங்களை இந்த  நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.  அதேபோல, மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள். பஞ்சாங்கம் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று. அதேபோல் நல்ல காரியங்கள், நல்ல விசேஷங்களை நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என நம்பப்படுகிறது. இப்படியாக தேதி நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை , சூலம் , பரிகாரம் ,சந்திராஷ்டமம், நாள், லக்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒரு நாளில் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

நாள் : ஆகஸ்ட் 25 – 2024 | 9 – ஆவணி – குரோதி – ஞாயிற்றுகிழமை

  1. நல்ல நேரம் –  காலை 07:45 – 08:45; மாலை 03:15 – 04:15
  2. கௌரி நல்ல நேரம் – காலை 10:45 – 11:45 – மாலை 01:30 – 02:30
  3. இராகு காலம் – 04.30 – 06.00
  4. எமகண்டம் – 12.00 – 01.30
  5. குளிகை – 03.00 – 04.30
  6. சூலம் – மேற்கு
  7. பரிகாரம் – வெல்லம்
  8. சந்திராஷ்டமம் – பூரம் உத்திரம்
  9. நாள் – கீழ் நோக்கு நாள்
  10. லக்னம் – சிம்ம லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 54
  11. சூரிய உதயம் – காலை 06:04
  12. ஸ்ரார்த திதி – சப்தமி
  13. திதி – இன்று காலை 11:12 AM வரை சஷ்டி பின்பு சப்தமி
  14. நட்சத்திரம் – இன்று அதிகாலை 12:03 AM வரை அஸ்வினி பின்பு பரணி இன்று இரவு 10:43 PM வரை, பின்பு கார்த்திகை
  15. சுபகாரியம் – மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷம்:

வேலையில் உயர் பதவிகளைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகளைத் தருகிறது. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். அதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் இருப்பதால் பொதுவாக எந்த முயற்சியும் பலனளிக்கும்.

ரிஷபம்:

வருமானம் பெருகும். சில முக்கியமான நிதி பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.  நோய்கள் மற்றும் கடன்கள் பெருமளவு குறையும். வருமான வழிகள் பலனளிக்கும்.

மிதுனம்:

வருமானத்துக்குப் பஞ்சமில்லை. நாளுக்கு நாள் வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் சில சுப முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம்:

வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மனம் என்ன முயற்சி எடுத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும். குறிப்பாக திருமணம் மற்றும் வேலை முயற்சிகளில் ஒரு நல்ல செய்தி கேட்கும். பணி வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.

சிம்மம்:

தொழில், வேலை, சமூக ரீதியாக முக்கியத்துவம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுடனான தொடர்புகள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட பிரச்சினைகள் சிறிய முயற்சியில் தீர்க்கப்படும்.

கன்னி:

ஆரோக்கியமும், வருமானமும் சிறப்பாக இருக்கும். பாக்ய ஸ்தானத்தில் குரு இருப்பதால் நிதி நிலைமை வெகுவாக மேம்படும். எந்தவொரு நிதி முயற்சியும் நிச்சயமாக வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்:

உத்யோகத்தில் சம்பள உயர்வு, தொழிலில் வருமானம் அதிகரிப்பதால் வருமானம் கூடும்.. ஆனால், அதிபதி சுக்கிரன் விரய ஸ்தானத்தில் நீசமாக இருப்பதால் பணம் கையில் தங்காத நிலை ஏற்படும். மருத்துவச் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:

வருமானத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது. இருப்பினும், செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால், எந்த முயற்சியும் கூடிவருவது கடினமாக இருக்கும். உரிய நேரத்தில் பணம் கிடைக்காது. நிதி நெருக்கடி இருக்கும். தனிப்பட்ட பிரச்சனைகள் சிறிய முயற்சியால் தீர்க்கப்படும்.

தனுசு:

உடல்நலம் மற்றும் தொழிலில் போட்டியாளர்களின் பிரச்சனைகள் அதிகமாகும். வருமானம் மிகவும் அதிகரித்தாலும் தேவையற்ற செலவுகளால் அவதிப்படு. கையில் காசுவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம்:

வருமானம் நாளுக்கு நாள் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. சம்பளம் உயர வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். நிதி முயற்சிகள் நன்றாக கூடி வரும்.

இதையும் படிங்க : 6 ராசிக்கு கடன் வாங்கினால் யோகம்.. காத்திருக்கும் வாய்ப்பு!

கும்பம்:

அனைத்து வேலைகளிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்பையும் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வாழ்க்கை மிகவும் பிஸியாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

மீனம்:

எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு மற்றும் வாகன வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறிய தனிப்பட்ட பிரச்சனைகளை கூட சமாளித்து விடலாம். வியாபாரத்தில் உங்களின் யோசனைகள் எதிர்பார்த்த லாபத்தை தரும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News