Today Panchangam 1 September 2024: செப்டம்பர் 1 ஆம் தேதி.. நல்ல நேரம், ராகுகாலம் போன்ற பஞ்சாங்கம் குறித்த தகவல்கள்!
பஞ்சாங்கம் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று. அதேபோல் நல்ல காரியங்கள், நல்ல விசேஷங்களை நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என நம்பப்படுகிறது. இப்படியாக தேதி நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை , சூலம் , பரிகாரம் ,சந்திராஷ்டமம், நாள், லக்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒரு நாளில் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
இன்றைய பஞ்சாங்கம் : செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலையில் 07:45 – 08:45 வரையும் மாலை 03:15 – 04:15 வரையும் உள்ளது. எனவே, இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் 12 – 01.30 வரையும், ராகு மாலை 4.30 – 6.00 வரை இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. அதேபோல, ஆயுதம் பழக, யாத்திரை போக, , சுபம் காரியங்கள்சிறந்த நாள். பஞ்சாங்கம் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று. அதேபோல் நல்ல காரியங்கள், நல்ல விசேஷங்களை நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என நம்பப்படுகிறது. இப்படியாக தேதி நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை , சூலம் , பரிகாரம் ,சந்திராஷ்டமம், நாள், லக்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒரு நாளில் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
- நாள் : செப்டம்பர் 1 -2024 | ஆவணி 16 – குரோதி – ஞாயிற்றுக்கிழமை
- நல்ல நேரம் : காலை 07:45 – 08:45; மாலை – 03:15 – 04:15
- கௌரி நல்ல நேரம் : காலை 10.30 – 11.00 – மாலை 01:30 – 02:30
- இராகு காலம் : மாலை 4.30 முதல் மாலை 6 மணி வரை
- எமகண்டம் : மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரை
- குளிகை : மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
- சூலம் : மேற்கு
- பரிகாரம் : வெல்லம்
- சந்திராஷ்டமம் : பூராடம் உத்திராடம்
- நாள் : கீழ்நோக்கு நாள்
- லக்னம் : சிம்ம லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 43
- சூரிய உதயம் : காலை 06:04
- ஸ்ரார்த திதி : திரயோதசி
- திதி : இன்று அதிகாலை 05:17 AM வரை திரயோதசிபின்பு சதுர்த்தசி
- நட்சத்திரம் : இன்று இரவு 11.49 PM வரை ஆயில்யம் பின்பு மகம்
- சுபகாரியம் : ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் செய்ய, கிணறு தோண்ட, வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்றைய நாளில் பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூட வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனைகள் குறையும். இல்லங்களில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சில வேலைகள் முடிவதில் அலைச்சல் ஏற்படலாம். தாய்வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும்.
ரிஷபம்
செப்டம்பர் 1 ஆம் தேதி போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்கள் மூலம் தேவைப்படும் விஷயங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தடைபட்ட பணிகளை அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணம் இருக்கலாம்.தீராத பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும்.
கடகம்
சகோதரர்களின் வழியில் திருமணம், வேலை உள்ளிட்ட எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் ரகசியங்களை சுற்றியிருப்பவர்களிடம் வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் பலனைப் பெறலாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் இருப்பது நல்லது.
சிம்மம்
வியாபார பணிகளில் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டாலும் கவனம். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனையும், கற்பனையும் மேம்படலாம். வெளிநாட்டு பயணங்களுக்கான சாதகமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த விஷயங்களில் ஈர்ப்பு உண்டாகும்.
கன்னி
இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பெற்றோர் வழியில் ஆதரவு ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் நினைத்தவை நடக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
துலாம்
உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படலாம். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான நேரங்களில் நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்
நீண்ட நாளாக தீராத பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிகப் பயணங்கள் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகலாம். எதிர்காலம் தொடர்பான குழப்பம் குறையும்.
தனுசு
மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களிடம் நிதானம் வேண்டும். மருத்துவ விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
மகரம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும்.
கும்பம்
பணி விஷயங்களில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும் நாளாக அமையும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தேவைப்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகலாம். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய நாளில் மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.