5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today Panchangam 10 July 2024: பஞ்சமி சுபமுகூர்த்த நாள்.. பஞ்சாங்கத்தின்படி நல்ல நேரம், ராகு காலம் எப்போது?

Today Tamil Panchangam: ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கிரகங்களின் போக்கின் அடிப்படையில் இந்த நேரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை இந்த நேரகாலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தின் நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரம் பார்க்கலாம்

Today Panchangam 10 July 2024: பஞ்சமி சுபமுகூர்த்த நாள்.. பஞ்சாங்கத்தின்படி நல்ல நேரம், ராகு காலம் எப்போது?
இன்றைய பஞ்சாங்கம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 10 Jul 2024 07:51 AM

இன்றைய பஞ்சாங்கம் : ஜூலை 10ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று தங்கம் வாங்க சிறந்த நாள். ஆஷாட நவராத்திரியின் 5வது நாளான  இன்று நல்ல நேரம் காலையில் 09:15 – 10:15  வரையும், மாலை 04:45 – 05:45  வரையும் உள்ளது. எனவே, இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று சுபமுகூர்த்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று சுப காரியங்கள் செய்வது உகந்ததௌ. பஞ்சாங்கம் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று. அதேபோல் நல்ல காரியங்கள், நல்ல விசேஷங்களை நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என நம்பப்படுகிறது. இப்படியாக தேதி நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், குளிகை , சூலம் , பரிகாரம் ,சந்திராஷ்டமம், நாள், லக்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒரு நாளில் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

நாள் : ஜூலை 10 – 2024 | 26 – ஆனி – குரோதி – புதன்கிழமை

 

  1. நல்ல நேரம் –  காலை 09:15 – 10:15, மாலை 4.45 மணி முதல் 5.45
  2. கௌரி நல்ல நேரம் – காலை 10.45 – 11.45 – மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
  3. இராகு காலம் -12.00 – 01.30
  4. எமகண்டம் – 07.30 – 09.00
  5. குளிகை – 10.30 – 12.00
  6. சூலம் – வடக்கு
  7. பரிகாரம் – பால்
  8. சந்திராஷ்டமம் – மூலம் பூராடம்
  9. நாள் – கீழ் நோக்கு நாள்
  10. லக்னம் – மிதுன லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 09
  11. சூரிய உதயம் – காலை 05:59
  12. ஸ்ரார்த திதி – பஞ்சமி
  13. திதி – இன்று காலை 08:31 AM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
  14. நட்சத்திரம் – இன்று காலை 11:20 AM வரை மகம் பின்பு பூரம்
  15. சுபகாரியம் – கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

Also Read : இந்த நாள் யாருக்கு சாதகம்? 12 ராசிகளுக்கான இன்றைய பலன்..

மேஷம்
தொழில், வியாபாரத்தில் ஓரிரு நிதிப் பிரச்சனைகள் தீரும். லாப நிலைமை நம்பிக்கைக்குரியது. பணியாளர்கள் தங்கள் செயல்திறனால் அதிகாரிகளை கவர்வார்கள். சிலர் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

ரிஷபம்
பணி மாறுதல் முயற்சிக்கு சாதகமான பதில் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்கும். லாபத்துக்கு பஞ்சம் இருக்காது. முக்கிய விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்
வேலை வாழ்க்கை மிகவும் ஊக்கமளிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். குடும்ப நிலைமைகள் மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் கொஞ்சம் செலவு கூடும். சுப காரியத்தில் அன்பான உறவினர்களை சந்திப்பீர்கள்.

கடகம்
வருமானம் படிப்படியாக அதிகரிக்கலாம், குறையாது. பெரும்பாலான நிதி பிரச்சனைகள் நீங்கும். தொழில், வியாபாரம் சீராகவும் லாபகரமாகவும் நடக்கும். போட்டியாளர்களின் பிரச்சனையும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

சிம்மம்
வேலையில் சில மன அழுத்தம் மற்றும் தொல்லைகள் இருக்கலாம். வியாபாரத்தில் லாபகரமான சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் ஓய்வு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

கன்னி
தொழில், வேலைகள் சுமுகமாக நடக்கும். உத்தியோகத்தில் சிறு மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். குடும்ப விவகாரங்கள் திருப்திகரமாக முன்னேறும். கணவன் மனைவியிடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

துலாம்

கிரகங்களின் பொருத்தத்தால் வருமானம் கூடுமே தவிர குறையாது. முக்கியமான தேவைகள் பூர்த்தியாகும். வீடு மற்றும் வாகன வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உடல்நலப் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்.

விருச்சிகம்
எந்த விஷயத்திலும் நியாயமாக நடந்து கொள்வது நல்லது. நெருங்கிய நண்பர்களால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்துப் பணிகளும் முயற்சிகளும் காரியங்களும் சுமுகமாக முடிவடையும்.

தனுசு
நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். சில விருப்பமான உறவினர்களின் வருகையால் வீட்டில் ஒரு பண்டிகை சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் பூஜைகள் செய்ய வாய்ப்பு உண்டு.

மகரம்
உறவினர்களின் ஆதரவால் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்பு இருக்கும். முதலீடு மற்றும் முயற்சிக்கு குறைவான பலன் கிடைக்கும்

கும்பம்
வருமானமும் ஆரோக்கியமும் சீராகும். ஏறக்குறைய ஒவ்வொரு பணியையும் சிறிய முயற்சியுடன் செய்ய முடியும். உணவு மற்றும் வெளியூர் பயணங்களில் முடிந்தவரை கவனமாக இருப்பது நல்லது.

மீனம்
நேரம் மிகவும் சாதகமாக இருப்பதால், புதிய முடிவுகள் எடுப்பது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அனைத்து வருமான முயற்சிகளும் விரும்பிய அளவிலான நிதி முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News