5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Housewarming: கிரகப்பிரவேஷம் செய்தால் கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டியவை!

சில பேர் வீட்டுக்கு போனால் நிம்மதியில்லை என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள். அதற்கு காரணம் வீட்டை நாம் பயன்படுத்தும் விதம் கூட காரணமாக இருக்கலாம். நம்மை சுற்றி இருக்கும் செடி கொடிகளில் இருந்து அசையா சொத்துக்கள் வரை அனைத்துக்கும் உணர்வலைகள் என்பது உண்டு. நம் முன்னோர்கள் வீடு கட்டும்போது அதனை குடும்பத்தில் ஒருவராக பாவித்து ஜாதகம் எழுதிய வரலாறு எல்லாம் உண்டு.

Housewarming: கிரகப்பிரவேஷம் செய்தால் கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டியவை!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Sep 2024 20:00 PM

வீடு கிரகப்பிரவேஷம்: பொதுவாக வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற சொல்மொழி நம்மூரில் பலர் சொல்வதை கேட்டிருப்போம். இரண்டுமே மிகப்பெரிய செலவு வைக்கும் என்பதாலும், இரு விஷயங்களும் முடிந்த பிறகு நம்முடைய வாழ்க்கை வேறு மாதிரியாக மாற்றம் பெறும் என்பதாலும் அப்படி சொல்வது உண்டு. பொதுவாக நாம் வாழும் இடத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்றால் வீடு புதிதாக கட்டு குடியேறினாலும், வாடகைக்கு சென்றாலும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என முன்னோர்களும், சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றது. சில பேர் வீட்டுக்கு போனால் நிம்மதியில்லை என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள். அதற்கு காரணம் வீட்டை நாம் பயன்படுத்தும் விதம் கூட காரணமாக இருக்கலாம். நம்மை சுற்றி இருக்கும் செடி கொடிகளில் இருந்து அசையா சொத்துக்கள் வரை அனைத்துக்கும் உணர்வலைகள் என்பது உண்டு. நம் முன்னோர்கள் வீடு கட்டும்போது அதனை குடும்பத்தில் ஒருவராக பாவித்து ஜாதகம் எழுதிய வரலாறு எல்லாம் உண்டு. இன்றைக்கும் நம்முடைய வீட்டை பெரியவர்கள் பார்த்து பார்த்து கட்டினோம் என பெருமையாக சொல்வார்கள்.

Also Read: ADMK Protest: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

வீடு கட்டி முடித்தபின் கிரகப்பிரவேஷம் செய்து பால் காய்ச்சுவார்கள். வீடி குடிபோக உகந்த மாதங்களாக சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் உள்ளது. இதேபோல் திங்கட்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகியவை குடிபோக சிறந்த நாட்களாகும். மேலும் அசுபதி, ரோகிணி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கொண்ட நாட்களில் குடிபோகலாம்.

ஒரு வீட்டுக்கு எக்காரணம் கொண்டும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்கள் குடிபோகக்கூடாது. விடுபட்ட மாதங்களான ஆடி, மாசி ஆகிய மாதங்களும் செய்யக்கூடாது. மேலே கூறப்பட்ட 4 மாதங்கள் ஆன்மிக மாதமாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக சூரிய பகவான் ஒவ்வொரு வீட்டிலும் சஞ்சரிப்பதை வைத்து தான் பலன்கள் கணிக்கப்படுகிறது. இதில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரண்டும் உள்ளது. அதில் அழித்தல் மாதமாக ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் உள்ளது.

Also Read: Spiritual: காலையில் வீட்டில் இப்படி விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் கொட்டும்!

மேற்கூறிய அனைத்தையும் பார்த்தபிறகு அந்த வீட்டில் வாழக்கூடியவர்களில் குடும்பத்தலைவன், தலைவி ஆகியோரின் ஜாதகத்தையும் கொண்டு உகந்த நாள் கணிக்கப்படுகிறது. வீட்டில் பால் காய்ச்ச வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்ய வேண்டும். விருந்தினர்களை வரும் வரை காத்திருக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களை கொண்டு கிரகப்பிரவேஷம் அதிகாலை நடத்த வேண்டும். பூலோக காமதேனு, மகாலட்சுமியின் சொரூபம் என சொல்லப்படுவதால் தான் புதிதாக கட்டிய வீட்டிற்குள் முதல்முதலாக பசுமாடு அனுப்பப்படுகிறது.

வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்த தலைவி தான் ரொம்ப முக்கியமானவர். வீட்டினுள் செல்லும்போது நிறைகுடம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மஞ்சள், அரிசி, வெல்லம், உப்பு மற்றும் பருப்பு 5 மங்கல பொருட்களை தாம்பாலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குத்து விளக்கு ஒன்றையும் கையில் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பூக்கள், பழங்கள் என அனைத்தையும் கொண்டு செல்லும்போது நிம்மதியான, மன மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என வேண்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.

கணபதி ஹோமம், நவக்கிரக யாகம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டும். வீட்டில் ஹோமம் செய்துவிட்டு பால் காய்ச்ச வேண்டும். அதன்பிறகு இனிப்புடன் கூடிய மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அன்றைய இரவு வீட்டில் தங்க வேண்டும். மேலும் முதல்முதலாக நாம் வீட்டுக்கு செல்லும்போது நமக்கு பிடித்த சுவாமி படங்களை கையோடு கொண்டு செல்ல வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News