5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Purattasi Saturday: புரட்டாசி சனிக்கிழமை.. பெருமாளுக்கு தளிகை வழிபாடு செய்வது எப்படி?

பெருமாள் கோயில்கள் இம்மாதம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்று இரவு கருட உற்சவம் நடைபெறும். இதிலும் தூக்கத்தை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக கூடுவார்கள்.  இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தினர் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Purattasi Saturday: புரட்டாசி சனிக்கிழமை.. பெருமாளுக்கு தளிகை வழிபாடு செய்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Sep 2024 19:47 PM

புரட்டாசி தளிகை: புரட்டாசி மாதம் வந்து விட்டாலே வைணவ சமயத்தினருக்கு புது உற்சாகம் கூடிவிடும். காரணம் இது அவர்களின் புனித மாதங்களில் ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த விசேஷமான மாதமாகும்.  அதுமட்டுமல்லாமல் அம்பிகைக்குரிய நவராத்திரி விழாவும் இந்த புரட்டாசி மாதத்தில் தான் வரும். பெருமாள் கோயில்கள் இம்மாதம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்று இரவு கருட உற்சவம் நடைபெறும். இதிலும் தூக்கத்தை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக கூடுவார்கள்.  இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தினர் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.மேலும் சனி பகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்க அன்றைய தினத்தில் பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: TVK Vijay: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?

பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் முதல், மூன்றாம், ஐந்தாம் சனிக்கிழமைகளில் தளிகை இட்டு பெருமாளை வழிபடுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பாண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமை தான் வருகிறது. அதிலும் இரண்டாவது சனிக்கிழமை ஏகாதசி வரும் நிலையில் அன்று சிலர் விரதம் இருப்பார்கள். இதனால் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபாடு செய்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதால் இன்றை நாளில் அதனை மேற்கொள்வது கஷ்டம். 3வது சனிக்கிழமை நவராத்திரி பண்டிகை தொடங்கி நடைபெறும் என்பதால் கடைசி சனிக்கிழமை தான் தளிகை வழிபாட்டு முறையை மாவிளக்கு போட்டு பின்பற்ற முடியும்.

Also Readவெளியே வரும் செந்தில் பாலாஜி.. விரையில் அமைச்சரவை மாற்றமா? திமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்!

தளிகை வழிபாட்டு முறை

அதாவது பெருமாள் வழிபாட்டின் போது சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், நெல்லிக்காய் சாதம், லெமன் சாதம், கருப்பு சுண்டல், தயிர் சாதம், மிளகு மற்றும் சீரகம் மற்றும் சேர்க்கப்பட்ட உளுந்த வடை, பானகம் ,மாவிளக்கு போன்ற உணவுகளை படைத்து படையல் இடலாம். மேலும் பூஜையறையில் பெருமாள் படத்தை நன்றாக சுத்தம் செய்து அதனை துளசி, சம்பங்கி, தாமரை, சாமந்தி உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்,

பின்னர் மூன்று வாழை இலைகளை அப்படத்தின் முன்னால் விரித்து தளிகை வழிபாட்டுக்கான பிரசாதம் வைத்து வழிபடலாம் வாய்ப்பு இருந்தால் அந்த உணவுகளை எல்லாம் கொண்டு பெருமாளின் உருவத்தை இலையில் வரைந்து வழிபடலாம். அப்போது மஞ்சளில் பிடிக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலையை வாழை இலையின் ஓரமாக வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின் போது பெருமாளோடு குலதெய்வத்தை நினைத்து வழிபட்டால் வாழ்வில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்க முடியாதவர்கள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு பூ, துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர்சாதம், சுண்டல், வடை பாயாசம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துக் கொள்ள வேண்டும். அவற்றை பாத்திரத்தில் வைக்காமல் வாழை இலையில் படைத்து வழிபட வேண்டும். மேலும் இந்த வழிபாட்டின்போது துளசி தீர்த்தம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.மேலும் தூபம் காட்டும் போது கோவிந்தா.. கோவிந்தா.. என்ற பெருமாள் நாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து காகத்திற்கு உணவு வைத்த பின்னர் தான் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News