Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு.. மறக்காமல் இதை ஃபாலோ பண்ணுங்க!
சில நேரங்களில் மஞ்சள், திருநீர், உப்பு, சந்தனம் , பசு சாணம் உள்ளிட்டவற்றில் பிள்ளையார் செய்தும் வழிபடுவோம். பல நேரம் கடையில் வாங்கிய விநாயகர் சிலையை வைப்போம். எதுவாக இருந்தாலும் சரி அந்த சிலை வடிவம் விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த விநாயகர் சிலையுடன் அவரது வாகனம் மூஷிகமும், மோதகமும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வார்கள். பின்னர் அதிலிருந்து ஒற்றைப்படை எண்களிலான நாட்களில் அதனை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இப்படிப்பட்ட விநாயகர் வழிபாட்டில் நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் விநாயகருக்கு தலையில் கிரீடம், குடை வைக்க வேண்டும். தலையில் கிரீடமோ, குடையோ வைக்காமல் நாம் என்ன செய்தாலும் விநாயகர் சிலை முழுமை பெறாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குடை அல்லது கிரீடம் வைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் கிட்டும் என நம்பப்படுகிறது.
Also Read: Bigg Boss Tamil Season 8: கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி.. வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 8..!
மேலும் சில நேரங்களில் மஞ்சள், திருநீர், உப்பு, சந்தனம் , பசு சாணம் உள்ளிட்டவற்றில் பிள்ளையார் செய்தும் வழிபடுவோம். பல நேரம் கடையில் வாங்கிய விநாயகர் சிலையை வைப்போம். எதுவாக இருந்தாலும் சரி அந்த சிலை வடிவம் விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த விநாயகர் சிலையுடன் அவரது வாகனம் மூஷிகமும், மோதகமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
நீங்கள் பூஜையறையில் வைக்கும் விநாயகர் சிலையை கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே வைத்து வழிபட வேண்டும். முதலில் விநாயகர் சிலைக்கு சிவப்பு நிற துணி அணிவித்து அவரை வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். பின்னர் பல விதமான விநாயகர் துதி பாடல்கள் பாடி வரவேற்பு அளிக்க வேண்டும்.
மேலும் வீட்டில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறம் திரும்பியவாறு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே விநாயகரின் துதிக்கை எப்போதும் இடது பக்கம் திரும்பி இருக்கும்படி பார்த்துக் கொண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகி நன்மைகள் அதிகரிக்கும்.அதேபோல் விநாயகர் சிலையை எப்போதுமே வீட்டில் தனியாக வைக்கக் கூடாது. காரணம் வீட்டில் எத்தனை விநாயகர் சிலை வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். ஆனால் அதனோடு லட்சுமி தேவியின் சிலை வைத்து வழிபடலாம். அதேசமயம் சிவன், பார்வதி, முருகன் ஆகிய கடவுளின் சிலையையும் சேர்த்து வைக்கவும். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் எல்லா நாட்களிலும் அவரை தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.
Also Read: Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல நேரம் எப்போது? – என்ன செய்யலாம்?
அதேசமயம் விநாயகர் சிலையை வீட்டில் நிறுவிய பிறகு செய்த பிறகு சமையலில் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சமைக்கவோ, சாப்பிடவோக்கூடாது. அவருக்கு பிடித்தமான அவல், பொரி, கொழுக்கட்டை, மோதகம் போன்றவைகளை படைக்க வேண்டும்.வீட்டில் விநாயகர் சிலையை நிறுவிய விநாயகர் சதுர்த்தி நாள் தொடங்கி 3, 5, 7 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கலாம். அதற்கு முன்னதாக கற்பூர ஆரத்தி காட்டி, பூஜை செய்யாமல் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லக்கூடாது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)