5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: பத்ர மஹா புருஷ யோகம்.. 6 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை புதன் கிரகம் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறது. கன்னி ராசியினருக்கு புதன் சொந்த கிரகம் மட்டுமின்றி உச்சம் பெற்றதாகவும் விளங்குகிறது. இதனால் 4  ராசிகளுக்கு பத்ர மகா புருஷ யோகம் என்ற மகாயோகம் உண்டாகிறது. பத்ர மஹா புருஷ யோகம் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர ஸ்தானங்களில் அதாவது 1, 4, 7, 10, மற்றும் உச்ச ஸ்வக்ஷேத்திரங்களில் இருக்கும்போது பத்ர மகா புருஷ யோகம் உண்டாகும்.

Astrology:  பத்ர மஹா புருஷ யோகம்.. 6 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Sep 2024 16:26 PM

ஜோதிட பலன்: பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிடத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கும். அப்படியான நிலையில் அதில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அந்த வகையுல் செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை புதன் கிரகம் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறது. கன்னி ராசியினருக்கு புதன் சொந்த கிரகம் மட்டுமின்றி உச்சம் பெற்றதாகவும் விளங்குகிறது. இதனால் 4  ராசிகளுக்கு பத்ர மகா புருஷ யோகம் என்ற மகாயோகம் உண்டாகிறது. பத்ர மஹா புருஷ யோகம் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர ஸ்தானங்களில் அதாவது 1, 4, 7, 10, மற்றும் உச்ச ஸ்வக்ஷேத்திரங்களில் இருக்கும்போது பத்ர மகா புருஷ யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள  பொருளாதார வல்லுநர்கள், வர்த்தகர்கள், வங்கியாளர்கள், நிதி வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், தொழில் வல்லுநர்கள், கணக்காளர்கள்  தங்கள் துறைகளில் மட்டுமின்றி சமூக ரீதியாகவும் முக்கிய நபராக அங்கீகரிக்கப்படுவார்கள்.  இந்த யோகத்தால் செப்டம்பர் 24ம் தேதி முதல் மிதுனம், கன்னி, தனுசு, மீனம், விருச்சிகம், மகர ராசிக்காரர்களுக்கு பாக்கியம் உண்டாகும்.

  • மிதுனம்: பத்ர மஹா புருஷ யோகம் இந்த ராசிக்கு அதிபதியான புதன் நான்காம் இடத்தில் இருக்கிறார். எந்தவொரு துறையிலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் திறமையையும் பயனையும் நிரூபிக்கிறார்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வார்கள்.  உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில்  புதிய சாதனைகளைப் படைப்பார்கள். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகத் தீர்க்கப்படும். வீடு, வாகன வசதிகள் உண்டாகும்.
  • கன்னி: புதன் பகவான் இந்த ராசியில் உச்சம் பெறப் போவதால் பத்ர மகா புருஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அந்தந்த துறைகளில் உச்சத்தை அடைவார்கள். செல்வம் பல வழிகளில் பெருகும். தனிப்பட்ட மற்றும் நிதி பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். நிதி விவகாரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உயர் பதவிகளை அடைவீர்கள். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலங்களாக வலம் வருவீர்கள்.
  • விருச்சிகம் : இந்த லக்னத்திற்கு புதன் உச்ச நிலையில் இருப்பதால் இந்த ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு தன யோகங்கள் அமைய வாய்ப்பு உள்ளது. பல வழிகளில் பண பலன்கள் உண்டாகும். இலாபகரமான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். தொழில்களில் லாபம் கிடைக்கும். சொத்து தகராறு, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்படும்.
  • தனுசு: இந்த லக்னத்திற்கு தசாஸ்தானத்தில் புதன் உச்சமாக இருப்பதால், இந்த ராசிக்கு பத்ர மகா புருஷ யோகம் ஏற்படும். இதன் காரணமாக எந்தத் துறையிலும் உயர் பதவிகளை அடைவார்கள். தொழிலில் சிறப்பாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி பெறும். வேலையில்லாதவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். நல்ல வேலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.
  • மகரம்: இந்த லக்னத்திற்குரிய அதிர்ஷ்ட ஸ்தானத்தில் புதன் உச்சம் பெற்றிருப்பதால், பல வழிகளில் வருமானம் பெருகும். திடீர் நிதி ஆதாயமும் உண்டாகும். பணியிடம், தொழில், வியாபாரத்தில் நல்ல சம்பள உயர்வு கூடும். வார்த்தைகள் மதிப்பு சேர்க்கும். உத்தியோகம் மற்றும் வேலை சம்பந்தமான உங்களின் ஆலோசனைகள் உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொத்து வாங்கலாம். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மீனம்: இந்த ராசிக்கு ஏழாவது வீட்டில் புதன் உச்சமாக இருப்பதால் பத்ர மகா புருஷ யோகம் உருவாகும். சமூகத்தில் ஒரு பிரபலமாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எந்தத் துறையாக இருந்தாலும் அந்தஸ்து உயரும் வாய்ப்பு உண்டு. பணக்கார அல்லது சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்வது சாத்தியமாகும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News