5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடேங்கப்பா..பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?

தொன்மையான நாகரீகம் உடைய நாடுகளில் கூட  தலையில் ஒரு பூ அல்லது மலர் கிரீடமாக வைக்கும் வழக்கம் இருக்கும். ஆனால் நாம் சரமாக கட்டி வைக்கும் வழக்கம் நம்முடைய தமிழர் பண்பாட்டில் உள்ளது. தமிழர் பண்பாடு நீண்ட நெடிய காலமாக நம்முடைய வம்சத்தினருக்கு கற்றுக்கொடுத்திருக்க கூடிய ஒரு அருமையான பண்பாடு. தலையில் பூ வைப்பதால் நாம் பார்ப்பதற்கு நன்றாக இருப்போம். அதனால் வைக்க சொல்லியிருப்பார்கள் என நினைப்போம்.

அடேங்கப்பா..பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?
கோப்பு புகைப்படம் (Image Credit: Getty)
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Aug 2024 13:30 PM

பூ வைப்பதால் நன்மைகள்: இயற்கையின் மணங்களில் மிக முக்கியமானது பூக்கள். கலர் கலராக, வித்தியாசமாக, அழகான பெயர்களுடன் கூட பூக்களை நம் வாழ்க்கையில் பார்த்திருப்போம். இந்த பூ வைப்பதால் பெண்களுக்கு பல பலன்கள் கிடைக்கிறது. பெண்களுக்கு எத்தனையோ பெயர் இருந்தாலும் பூவையர் அப்படின்னு ஒரு பெயர் உள்ளது. நம்முடைய நாட்டில் தான் தலையில் பூ கட்டி வைக்கும் வழக்கம் உள்ளது. தொன்மையான நாகரீகம் உடைய நாடுகளில் கூட  தலையில் ஒரு பூ அல்லது மலர் கிரீடமாக வைக்கும் வழக்கம் இருக்கும். ஆனால் நாம் சரமாக கட்டி வைக்கும் வழக்கம் நம்முடைய தமிழர் பண்பாட்டில் உள்ளது. தமிழர் பண்பாடு நீண்ட நெடிய காலமாக நம்முடைய வம்சத்தினருக்கு கற்றுக்கொடுத்திருக்க கூடிய ஒரு அருமையான பண்பாடு. தலையில் பூ வைப்பதால் நாம் பார்ப்பதற்கு நன்றாக இருப்போம். அதனால் வைக்க சொல்லியிருப்பார்கள் என நினைப்போம். ஆனால் நாம் வைக்கும் பூக்களில் இருந்து எழக்கூடிய வாசனை நமக்கே தெரியாமல் நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.  அப்படி என்ன மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

  •  முதலில்  கோவத்தை குறைத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. மூளையில் உள்ள  நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரப்பதற்கு உண்டான பணிகளை செய்கிறது,
  • ஹாப்பி ஹார்மோன் என சொல்லக்கூடிய செரோட்டினின் போன்ற சுரப்பிகள் நன்றாக இயங்க மகரந்த வாசனை முக்கியமானது. அது பூ மூலமாக கிடைக்கிறது.
  • பூ வைப்பதால் பெண்களுக்கு Extrasensory perception எனப்படும் நுண்ணறிவு திறன் அதிகமாக இருக்கிறது என ஆய்வுகள் சொல்கிறது. ஒருவருக்கு அறிவு ஒன்று இருப்பதற்கும், அது கூர்மையாக இருப்பதற்கும் இந்த பூக்கள் மிகவும் உதவுகிறது. அதனால் வெளியே செல்லும்போது பூ வைத்து விட்டு போக சொல்கிறார்கள். இதன்மூலம் நம்மைச் சுற்றி என்ன நடக்கும் என்பது கணிக்க முடியும்.
  • பூ வைப்பதால் சாதாரண பெண் கூட பேரழகியாக மாறுவார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடைய வாழ்க்கையில் பூக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் பூக்கள் உடன் பயணிக்கிறது. அதனால் வாழ்த்தும்போது கூட பூவும், பொட்டும் நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறார்கள். பெண்ணாய் பிறந்த காலம் தொட்டே பூ பெண்ணுக்கு சொந்தமாகிறது.
  • பூ என்பது அன்பின் அடையாளம். என்னதான் இல்வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு உயரிய பொருட்களை பரிசாக வழங்குவதை விட பூ கொடுக்கும்போது அன்பு அதிகமாகும் என சொல்கிறார்கள்.
  • பூ வைப்பது சிலருக்கு அலர்ஜியாக இருக்கும் என சொல்வார்கள். அவர்கள் அந்த குறிப்பிட்ட பூவை தவிர்த்து தங்களுக்கு ஏற்ற மலர்களை தேர்வு செய்யலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News