Spiritual: வீட்டில் தெய்வ நடமாட்டம் இல்லையா? – கண்டுபிடிப்பது இப்படி தான்!
தெய்வ நடமாட்டம் இல்லாத வீட்டில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறைவாகவே இருக்கும் என்பதை வைத்தே எளிதாக நாம் அறிந்துக் கொள்ளலாம். ஒரு வீட்டின் வடகிழக்கு பகுதியில் பூஜை அறை இருந்தால் கண்டிப்பாக அந்த வீட்டில் தெய்வம் நிலைத்திருக்காது. நீங்கள் எவ்வளவுதான் பூஜை வழிப்பாடு மேற்கொண்டாலும் அதன் பலன் எதிராகவே இருக்கும். கடன், திருமணத்தடை, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதது போன்றவை இருக்கும்.
ஆன்மிக தகவல்கள்: உலகளவில் பல மதங்கள், பல்வேறு விதமான கடவுள்கள் இருந்தாலும் 100க்கு 99 சதவிகிதம் பேர் இறை நம்பிக்கை கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள். தான் இருக்கின்ற இடம், செய்கின்ற செயல், தன்னுடைய எதிர்கால நலன் ஆகியவற்றை கணிப்பதிலும், சோதனை அல்லது நற்பலன்கள் தருவதிலும் இறைவனின் பங்கு அதிகம் என சொல்வார்கள். கடவுளுக்கு என்று தனியாக வழிபாட்டுத்தலங்கள் உள்ள நிலையில் எல்லா நாளும் நம்மால் அங்கு செல்ல முடியாது. அதனால் தான் வீட்டில் கடவுள் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இப்படியான நிலையில் வீட்டில் தெய்வ நடமாட்டம் இல்லை என்பதை சில அறிகுறிகள் வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். தெய்வம் வீட்டில் இருக்கிறது என்பது குரு கர்மாவாகவும், இல்லை என்பது ராகு கர்மாவாகவும் எனவும் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Crime News: ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த கொடூரம்.. துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை.. 8 பேர் கும்பல் அட்டூழியும்!
தெய்வ நடமாட்டம் இல்லாத வீட்டில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறைவாகவே இருக்கும் என்பதை வைத்தே எளிதாக நாம் அறிந்துக் கொள்ளலாம். ஒரு வீட்டின் வடகிழக்கு பகுதியில் பூஜை அறை இருந்தால் கண்டிப்பாக அந்த வீட்டில் தெய்வம் நிலைத்திருக்காது. நீங்கள் எவ்வளவுதான் பூஜை வழிப்பாடு மேற்கொண்டாலும் அதன் பலன் எதிராகவே இருக்கும். கடன், திருமணத்தடை, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதது போன்றவை இருந்தாலே நீங்கள் வசிக்கும் வீட்டில் தெய்வ வாசம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அதேபோல் தென்மேற்கு பகுதியில் பூஜை அறை இருந்தாலும் தெய்வ நடமாட்டம் இருக்காது என சொல்லப்படுகிறது. இந்த திசையில் பூஜை அறையில் இருந்தால் வீட்டின் தலைவனை நீங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் வீட்டின் தலைவன் வீட்டிலேயே தங்க மாட்டார். எப்போது பார்த்தாலும் வெளியிடம் அல்லது வெளி மாநிலம், வெளிநாடுகளில் தான் இருப்பார். அந்த வகையில் தலைவனே வீட்டில் தங்காத போது தெய்வம் மட்டும் எப்படி தங்கும். இதுவும் நீங்கள் தெய்வத்தை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதாக தான் அர்த்தப்படும்.
யார் வீட்டின் வாசலில் கரையான், எறும்புப்புற்று, உடைக்கப்பட்ட தாழ்ப்பாள், அடிக்கப்பட்டிருந்த பெயிண்ட் அழிந்திருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வ நடமாட்டம் என்பது இருக்காது. மேலும் இந்த வீடுகளில் விஷ ஜந்துகளின் தொடர்புகள் அதிகமாக இருக்கும். அதேபோல் ஒரு வீட்டுக்குள் மாலை நேரத்தில் வவ்வால், பூரான், தேள் போன்றவை வந்தால் அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.
இதையும் படிங்க: Spiritual: வீட்டில் குபேரர் சிலை வைக்கலாமா? – வழிபாட்டுமுறை இதுதான்!
அதேசமயம் இயற்கை நிகழ்வுகள் தவிர்த்து வீட்டு வாசலில் நன்றாக செழித்து வளர்ந்த செடி, மரங்கள் காய்ந்தால் கூட தெய்வ நடமாட்டம் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை எல்லாம் சரியாக கவனித்து செயல்படுத்தினால் மட்டுமே நமக்கு நல்ல நேரம் வரும்.
சில பேரின் வீட்டு வாசலில் குலதெய்வம் இருப்பதாக கூறுவார்கள். ஆனால் எவ்வளவுதான் வழிபாடு செய்து அழைத்தாலும் வீட்டில் உள்ளே வர மறுக்கிறது என வருத்தம் தெரிவிப்பார்கள். நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். குலதெய்வம் என்றாலே நம்மை காப்பதற்காக வாசலில் நிற்கக் கூடியது தான். அதனால்தான் அதனை காவல் தெய்வம் என அழைக்கிறோம். எந்த குலதெய்வம் வீட்டினுள் வந்து ஆட்சி செய்யாது. எப்போதெல்லாம் நமக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் நமது குலதெய்வத்தை அழைக்கும் விதமாக வீட்டின் தலைவாசல் அருகே அதற்கான சிலை அல்லது மாடம் வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் இருந்தது.
பெரும்பாலும் வீட்டிற்கு பின்புறம் தான் கல்லை வைத்து குலதெய்வமாக நினைத்து வழிபடும் பழக்கமும் இருந்து வருகிறது. பழைய கால வீடுகளில் வாசல் பகுதியில் மாடம் ஒன்றை வைத்து அதில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அது குலதெய்வத்துக்கான மாடம் தான். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எல்லாம் மாடம் வைத்து வீடு கட்டும் பழக்கம் எதுவும் இல்லை.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)