Spiritual: முருகனின் திருப்புகழை பாடினால் இவ்வளவு நன்மைகளா?
எங்கும் எதிலும் இரண்டற கலந்து இருப்பவனே முருகப்பெருமான் என நம்பப்படுகிறது. முருகனை மையப்படுத்திய திருப்புகழுக்கு வேறு எந்த புனித நூலுக்கும் இல்லாத ஒரு தனிப்பெருமை உண்டு. காரணம் இதில் முருகனை முன்னிறுத்தி பாடப்பட்டாலும் மற்ற தெய்வங்கள் பற்றியும் அருணகிரிநாதர் புகழ்ந்து பாடி இருக்கிறார். சைவ, வைணவ என எந்த பேதமும் பார்க்காமல் பாடியிருப்பது திருப்புகழ் நூலுக்கு கிடைத்த தனி பெருமையாக திகழ்கிறது.
திருப்புகழ்: பொதுவாக திருப்புகழை பாட வாய் மணக்கும் என்பது சான்றோர் கூற்றாக உள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனியாக திருநாமங்கள் உள்ளது. அந்த அனைத்து தெய்வங்களின் திருநாமங்களோடு ஒன்றிப்போகும் அழகு முருகப்பெருமானை மையப்படுத்திய திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் பெயர்களில் கூட முன்னாள் ஒரு கடவுள் பெயர் வரும்போது பின்னால் முருகன் பெயர் சேர்த்து அழைக்கப்படுகிறது. எங்கும் எதிலும் இரண்டற கலந்து இருப்பவனே முருகப்பெருமான் என நம்பப்படுகிறது. முருகனை மையப்படுத்திய திருப்புகழுக்கு வேறு எந்த புனித நூலுக்கும் இல்லாத ஒரு தனிப்பெருமை உண்டு. காரணம் இதில் முருகனை முன்னிறுத்தி பாடப்பட்டாலும் மற்ற தெய்வங்கள் பற்றியும் அருணகிரிநாதர் புகழ்ந்து பாடி இருக்கிறார். சைவ, வைணவ என எந்த பேதமும் பார்க்காமல் பாடியிருப்பது திருப்புகழ் நூலுக்கு கிடைத்த தனி பெருமையாக திகழ்கிறது. இந்தத் திருப்புகழில் எழுதப்பட்டுள்ள பாடல்களை தொகுத்து பாடுவதே திருப்புகழ் மகா மந்திர வழிபாடு என சொல்லப்படுகிறது.
Also Read: Mint Leaves Benefits: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை.. எண்ணற்ற நன்மைகளை தரும் புதினா இலைகள்..!
பொதுவாக திருப்புகழ் மகா மந்திர பூஜையில் விநாயகர், சிவபெருமான், அம்பாள், ஐயப்பன், மகாவிஷ்ணு, அனுமன் ஆகிய கடவுள் படங்களை சுற்றிலும் வைத்து நடுவில் முருகனின் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த ஏழு தெய்வங்களையும் வைத்து பூஜை செய்யும் போது அதில் பங்கேற்கும் கிடைக்கக்கூடிய பலன் பல மடங்கு அதிகம் என ஐதீகமாக உள்ளது. இந்த திருப்புகழ் பூஜையில் விநாயகருக்கு அருகம்புல்லும், சிவனுக்கு வில்வ இலையும், அம்பிகைக்கு செண்பக மலரும், விஷ்ணுவுக்கு பவள மல்லிகையும், ஐயப்பனுக்கு கதம்பமும், ஆஞ்சநேயருக்கு துளசியும், முருகனுக்கு செந்தாமரையும் என ஏழு வகை மலர்களைக் கொண்டு பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது.
அதைப்போல் விநாயகருக்கு சுண்டல், சிவனுக்கு சீரக சம்பா சாதம், மகாவிஷ்ணுவுக்கு புளியோதரை, ஐயப்பனுக்கு நெய் அப்பம், அனுமனுக்கு மிளகு வடை, அம்பாளுக்கு பாயாசம், முருகனுக்கு திணை மாவு என ஏழு வகை நைவைத்தியங்கள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் சகல தெய்வங்களும் இந்த திருப்புகழ் மகா மந்திர பூஜையில் சங்கமிப்பதால் நம்முடைய வாழ்க்கையில் நிலவும் குறைகள் அனைத்தும் நீங்கி எதிர்காலத்தில் வளங்கள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Also Read:Solar eclipse: மஹாளய அமாவாசையில் சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
அதேசமயம் கடன் தொல்லை, உடல் நல பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், வரன் கிடைக்காமல் திண்டாடும் நபர்கள், வீடு, சொத்து விஷயங்களில் தீர்வு கிடைக்காமல் இருப்பவர்கள், வழக்குகளில் சிக்கி தவிர்ப்பவர்கள் என பல பிரச்சனை கொண்டவர்கள் இந்த திருப்புகழ் மகா மந்திர பூஜையில் ஒரு முறை கலந்து கொண்டால் நிச்சயம் அதன் பலன்களை விரைவில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருப்புகழ் பூஜை செய்வது எப்படி
சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி புனித நீராட வேண்டும். தொடர்ந்து பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன் முன்னாள் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட வேண்டும். உங்களுக்குத் தெரிந்த முருகப்பெருமானின் திருப்புகழின் ஏதேனும் ஒரு பாடலை பாடலாம். இதனை மனப்பாடமாக செய்து வழிபாட்டில் பாட வேண்டும் என்பது இல்லை. திருப்புகழ் தொடர்பான புத்தகத்தை படித்தும் பாராயணம் செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் தினமும் காலை, மாலை இந்த பூஜையை செய்தால் கண்டிப்பாக இந்த காலகட்டம் முடிவதற்குள் முருகன் நிச்சயம் உங்கள் கனவில் தோன்றுவார் என்பதை நம்பிக்கை ஆகும். நீங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என கனவு அல்லது ஏதேனும் நபர்கள் மூலம் உங்களுக்கு சொல்லப்படும். அங்கு சென்று வேண்டிக்கொண்டால் நல்ல நிகழ்வுகள் வாழ்க்கையில் நிலவும். இந்த திருப்புகழ் பூஜை வீட்டில் செய்வதால் மேற்கொண்டு பணம் செலவழித்து யாகமோ, பூஜையோ செய்ய வேண்டிய அவசியமில்லை என சொல்லப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)