5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

September 2024 Festival Calendar: விநாயகர் சதுர்த்தி, ஓணம்.. செப்டம்பர் மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!

செப்டம்பர் மாதம் பிறக்கும் நிலையில் அந்த மாதத்தில் என்னென்ன ஸ்பெஷலான விஷயங்கள் ஆன்மிக ரீதியாக இடம் பெற்றுள்ளது என்பதை நாம் இந்த தொகுப்பில் காணலாம். குறிப்பாக செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியே மாத சிவராத்தியுடன் பிறப்பதால் இம்மாதம் நிச்சயம் 12 ராசிக்காரர்களுக்கு அமோகமான மாதமாக அமையும் என கருதப்படுகிறது.

September 2024 Festival Calendar: விநாயகர் சதுர்த்தி, ஓணம்.. செப்டம்பர் மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Aug 2024 18:10 PM

செப்டம்பர் மாதம்: 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் பகுதியின் நிறைவுக்கு வந்து விட்டோம். செப்டம்பர் மாதம் பிறக்கும் நிலையில் அந்த மாதத்தில் என்னென்ன ஸ்பெஷலான விஷயங்கள் ஆன்மிக ரீதியாக இடம் பெற்றுள்ளது என்பதை நாம் இந்த தொகுப்பில் காணலாம். குறிப்பாக செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியே மாத சிவராத்தியுடன் பிறப்பதால் இம்மாதம் நிச்சயம் 12 ராசிக்காரர்களுக்கு அமோகமான மாதமாக அமையும் என கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மாதமான புரட்டாசி பிறப்பதால் சிவம் மட்டுமல்லாது பெருமாள் கோயில்களும் இம்மாதத்தில் விசேஷமாக இருக்கும். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை நடைபெறுவதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மேலும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகளும் வருகிறது. மேலும் முதல் 15 நாட்களில் கிட்டதட்ட 4 நாட்கள் வளர்பிறை சுபமுகூர்த்தமாக உள்ளது. மேலும் புரட்டாசி மாதப்பிறப்பன்று பௌர்ணமி வருவது ஆன்மிகத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அண்ணா, பெரியார், பிரதமர் மோடி மற்றும் பகத்சிங் போன்ற தலைவர்களின் பிறந்தநாளும் வருகிறது. நாம் இந்த மாதத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செப்டம்பர் 15க்குள் செய்ய வேண்டும். புரட்டாசி மாதம் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது. எனவே கீழே கொடுத்திருக்கும் நாட்குறிப்புகளை பயன்படுத்தி ஆன்மீக ரீதியாகவும், பிற நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் நடத்தி முன்னேற்றம் காணுங்கள்.

செப்டம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள்

  • செப்டம்பர் 1 (ஞாயிறு) – மாத சிவராத்திரி
  • செப்டம்பர் 2 (திங்கள்) – ஸர்வ அமாவாசை
  • செப்டம்பர் 4 (புதன்) – சந்திர தரிசனம்
  • செப்டம்பர் 5 (வியாழன்) – சுபமுகூர்த்தம்/ ஆசிரியர் தினம்
  • செப்டம்பர் 6 (வெள்ளி) – சுபமுகூர்த்தம்
  • செப்டம்பர் 7 (சனி) – விநாயகர் சதுர்த்தி 
  • செப்டம்பர் 8 (ஞாயிறு) – சுபமுகூர்த்தம்/ ஆவணி ஞாயிற்றுக்கிழமை / தேவமாதா பிறந்தநாள்
  • செப்டம்பர் 9 (திங்கள்) – ஷஷ்டி விரதம் 
  • செப்டம்பர் 11 (புதன்) – அஷ்டமி 
  • செப்டம்பர் 12 (வியாழன்) – நவமி
  • செப்டம்பர் 13 (வெள்ளி) – கரிநாள்
  • செப்டம்பர் 14 (சனி) – சர்வ ஏகாதசி
  • செப்டம்பர் 15 (ஞாயிறு) – சுபமுகூர்த்தம்/ ஓணம் பண்டிகை/ ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை / அண்ணா பிறந்தநாள்/பிரதோஷம்

இதையும் படிங்க: Dream Astrology: கனவில் இதெல்லாம் கண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

  • செப்டம்பர் 16 (திங்கள்) – சுப முகூர்த்தம்/ மிலாடி நபி 
  • செப்டம்பர் 17 (செவ்வாய்) – புரட்டாசி மாதப் பிறப்பு / பௌர்ணமி/ பெரியார் பிறந்தநாள்/ பிரதமர் மோடி பிறந்தநாள்
  • செப்டம்பர் 21 (சனி) – சங்கடஹர சதுர்த்தி / புரட்டாசி சனிக்கிழமை
  • செப்டம்பர்  22 (ஞாயிறு) – கார்த்திகை விரதம்
  • செப்டம்பர் 25 (புதன்) – தேய்பிறை அஷ்டமி 
  • செப்டம்பர் 26 (வியாழன்) – தேய்பிறை நவமி 
  • செப்டம்பர் 28 (சனி) – சர்வ ஏகாதசி/ புரட்டாசி சனிக்கிழமை
  • செப்டம்பர் 30 (திங்கள்) – மாத சிவராத்திரி/ பிரதோஷம்

Latest News