5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபட உகந்த நேரம் எது?

Gokulashtami 2024: இரண்டு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படும். அதாவது கிருஷ்ணன் நள்ளிரவு நேரத்தில் தான் பிறந்தார். ஆனால் திதியை கணக்கிட்டு சில மாநிலங்களில் முதல் நாளும், நட்சத்திரத்தை கணக்கிட்டு வட இந்தியாவில் இரண்டாவது நாளும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படும். அதாவது கிருஷ்ணன் நள்ளிரவு நேரத்தில் தான் பிறந்தார். ஆனால் திதியை கணக்கிட்டு சில மாநிலங்களில் முதல் நாளும், நட்சத்திரத்தை கணக்கிட்டு வட இந்தியாவில் இரண்டாவது நாளும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபட உகந்த நேரம் எது?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Aug 2024 13:02 PM

கிருஷ்ண ஜெயந்தி: பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இப்பண்டிகை ஆவணி மாதத்தில் வருவது வழக்கம். அந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணர் குழந்தை கண்ணனாக பிறந்ததாக சாஸ்திரங்கள் சொல்கிறது. இரண்டு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படும். அதாவது கிருஷ்ணன் நள்ளிரவு நேரத்தில் தான் பிறந்தார். ஆனால் திதியை கணக்கிட்டு சில மாநிலங்களில் முதல் நாளும், நட்சத்திரத்தை கணக்கிட்டு வட இந்தியாவில் இரண்டாவது நாளும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Also Read: Krishna Janmashtami: கிருஷ்ணர் படங்களை வீட்டில் வைப்பதால் பிரச்னை வருமா?

என்ன செய்யலாம்?

கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாள் வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பகவான் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து புனித நீராடி மனையடிபலகையில் கோலம் போட்டு அதில் சிலை அல்லது உருவப்படத்தை நிறுத்த வேண்டும். பின் பூ, துளசி மாலை உள்ளிட்ட என்னென்ன அலங்காரம் செய்யலாமோ அதனையெல்லாம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட், முறுக்கு, அல்வா, சீடை, பால், வெண்ணெய் என அனைத்தையும் கண்ணனுக்கு படைக்கலாம். வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு மகிழலாம். மேலும் குழந்தை கண்ணன் நம் வீட்டுக்கு வருவதாக கருதி குழந்தையின் கால்தடத்தை வாசலில் இருந்து பூஜையறை வரை போடலாம்.

Also Read: Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – 12 ராசிக்காரர்கள் இப்படி வழிபட்டால் சிறப்பு!

வழிபாடு நடத்த சிறந்த நேரம் 

அன்று காலை 09.13 மணி முதல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 07.30 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. அதனால் கோகுலாஷ்டமி வழிபாடு என்பது இரவில் இருக்க வேண்டும். எனவே இந்த நாளில் வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ண வழிபாட்டினை தொடங்கலாம். அதுமட்டுமல்லாமல் கிருஷ்ண ஜெயந்தி சரியான நேரத்தில் கொண்டாட நினைப்பவர்கள் ரோகிணி நட்சத்திரம் வரும் சமயமான ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 09.41 மணி தொடங்கி ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 08.54 மணி வரை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி இரண்டை சேர்த்து வழிபடுவதற்கான நேரம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் 07.20 மணி வரை உள்ளது. இந்த நேரத்திலும் நாம் வழிபடலாம். வட இந்தியாவில் 2வது நாள் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News