5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை வைத்து வழிபட்டால் சிறப்பு!

கிருஷ்ணர் குழந்தை கண்ணனாக ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட தினம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிறது.  இந்த நாளில் வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணர் வழிபாட்டினை தொடங்கலாம். ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி இரண்டை சேர்த்து வழிபடுவதற்கான நேரம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் 07.20 மணி வரை என கணிக்கப்பட்டுள்ளது.

Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை வைத்து வழிபட்டால் சிறப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Aug 2024 17:00 PM

கிருஷ்ண ஜெயந்தி: பகவான் கிருஷ்ணரின் அவதாரங்களில் ஒன்று குழந்தை கண்ணன். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணா அவதாரம் பல அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததாகும். அப்படி இருக்கும் நிலையில் கிருஷ்ணர் குழந்தை கண்ணனாக ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட தினம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிறது.  இந்த நாளில் வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணர் வழிபாட்டினை தொடங்கலாம். ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி இரண்டை சேர்த்து வழிபடுவதற்கான நேரம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் 07.20 மணி வரை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை நம் வீட்டுக்கு வரவழைக்கும் வகையில் வழிபாடு நடத்த வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வழிபாட்டில் வைப்பதால் வீடு கிருஷ்ணரால் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அதனைப் பற்றி காணலாம்.

  1. மயில் இறகு:  பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது மயில் இறகு. அவர் தனது கிரீடத்தில் எப்போதும் மயில் இறகுகள் இருப்பதை காணலாம். மயில் இறகுகளை வைத்து வழிபடுவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. அதே போல்  மயில் தோகை இருக்கும் இடங்களில் இருக்கும்  பிரச்னைகள் நீங்கி நன்மை பெறும்.
  2. வெண்ணெய்: பகவான் கிருஷ்ணர் சிறுவயதில் இருந்தே வெண்ணெய்யை விரும்பினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . ஸ்ரீ கிருஷ்ணர் வீட்டில் வெண்ணெய் திருடி சாப்பிட்டதாக புராணங்கள் சொல்கிறது. அதனால் வெண்ணெய் திருடன் என அன்போடு அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து அர்ச்சனை செய்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
  3. புல்லாங்குழல்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதில் கண்டிப்பாக ஒரு புல்லாங்குழல் இருக்கும். பகவான் கிருஷ்ணருக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் இந்த நாளில் ஒரு வெள்ளி அல்லது மரப் புல்லாங்குழலை வாங்கி கிருஷ்ணருக்கு காணிக்கை செலுத்தி வழிபடலாம். அதனை பூஜை முடிந்ததும் பத்திரமாக வைக்கவும். இது வீட்டில் இருக்கும் நிதி சிக்கல்களை தீர்க்கும் என சொல்லப்படுகிறது.
  4. பசு-கன்று சிலை: சாஸ்திரத்தின்படி, பசு மாட்டில் எண்ணற்ற தெய்வங்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. கிருஷ்ண பகவானுக்கு பசுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பசுவின் பாலில் செய்யப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவை அவருக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. ஆகவே கிருஷ்ண ஜெயந்தி நாளில் கோவிலிலோ அல்லது வீட்டின் கிழக்கு மூலையில் பசுவுடன் கூடிய கன்று சிலையை வைப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். மேலும் இந்நாளில் பசுவிற்கு உணவாக கொடுத்தால்  அனைத்து கிரக நோய்களும் நீங்கும் என சொல்லப்படுகிறது.
  5. ஊஞ்சல்: கிருஷ்ணரின் குழந்தை வடிவமான கண்ணனுக்கு ஊஞ்சல் மிகவும் பிடிக்கும். கோகுலாஷ்டமி நாளில் ஊஞ்சல் வாங்கி அதில் கண்ணன் சிலையை வழிபாடு செய்யுங்கள். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
  6. வைஜெயந்திமாலா: வட இந்தியாவில் ஒரு பூக்களில் இருந்து எடுத்து தரக்கூடிய ஒரு விதையின் மூலம் செய்யப்படுவது வைஜெயந்திமாலா மாலையாகும். இந்த மாலையில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் அன்று வைஜெயந்தி மாலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து வழிபட்டால் லட்சுமி தேவி மகிழ்வாள் என்பது ஐதீகமாகும். வீட்டில் இருந்த நிதி பிரச்சனைகள் தீரும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News