Astrology: கணவன், மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க வேண்டுமா? – இதோ டிப்ஸ்!
ஒரு பெண் வீட்டை திறந்து, தன் சுற்றத்தை துறந்து, பெற்றோர் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுட்டு கணவன் போகும் வழியில் செல்ல வரும்போது அவளுக்கான சுதந்திரமான வாழ்க்கையை கணவன் கொடுக்க வேண்டும். இதனைத் தான் இல்வாழ்க்கையில் முதலில் ஒரு கணவனாக ஆண் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு பெண்ணும் கணவனுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை உணர வேண்டும்
உறவு வளர்ச்சி: ஒவ்வொருவருர் வாழ்க்கையில் திருமணம் பற்றிய பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதில் தனக்கு கணவன், மனைவியாக வரப்போகிறவர்கள் பற்றி பல்வேறு எண்ணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட உறவைப் பற்றி சாஸ்திரங்கள் சொல்வதென்றால், ஒன்றாகவே காண்பது தான் காட்சி என்ற வரியைப் போல கணவன், மனைவி உறவு இருக்க வேண்டும் என்பது தான். முதலில் கணவன், மனைவி வாழ்க்கைக்குள் புரிதல் என்பது தேவையாகும். இருவருக்கும் வெவ்வேறு விதமாக கருத்துகள், உணர்வுகள் இருக்கலாம். அதையெல்லாம் நாமும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என அவசியமில்லை. புரிந்தாலே போதும். கணவன் மனைவி உறவில் சண்டையில்லாமல் வாழ்வதற்கு என்ன தேவை என பார்த்தால் மனைவிக்கான சுதந்திரம், கணவனுக்கான வாழ்க்கை முறை பற்றி ஒருவருக்கொருவர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
Also Read: MohanLal: பாலியல் புகாரால் தொடர் நெருக்கடி.. மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா!
ஆறறிவு படைத்த ஒரு பெண் வீட்டை திறந்து, தன் சுற்றத்தை துறந்து, பெற்றோர் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுட்டு கணவன் போகும் வழியில் செல்ல வரும்போது அவளுக்கான சுதந்திரமான வாழ்க்கையை கணவன் கொடுக்க வேண்டும். இதனைத் தான் இல்வாழ்க்கையில் முதலில் ஒரு கணவனாக ஆண் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு பெண்ணும் கணவனுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை உணர வேண்டும்
என்னதான் இருவருக்குள்ளும் அன்யோன்யமான வாழ்க்கை இருந்தாலும் உணர்வுகள், ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் வேறு தான் என்கிற புரிதல் இருக்க வேண்டும். இதன் பிறகு கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேச வேண்டும். இப்போது எல்லாம் மனம் விட்டு பேசுவது என்பது ரொம்ப ரொம்ப குறைஞ்சு போய்விட்டது. இருவரும் எப்போது மனம் விட்டு பேசுகிறார்கள் என கேட்டால், கல்யாணம் நிச்சயிக்கப்படுவதில் இருந்து திருமணம் நடப்பது வரை ஒவ்வொரு விஷயத்துலேயும் பல நிலைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் திருமணம் முடிந்த பிறகு பேசுவது என்பதே இல்லாமல் போய்விட்டது. பிரசனைகளின் முதல் படியே பேசாமல் இருப்பது தான்.
Also Read: Alien : உலகில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் சொன்ன அதிர்ச்சி தகவல்!
எனவே தினமும் ஒரு முறையாவது கண்டிப்பாக மனம் விட்டு என்ன தேவை, எது நல்லது என்பதை கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல் இருவரும் குடும்ப உறுப்பினர்களின் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். அப்படியாகும் பட்சத்தில் எப்போது பார்த்தாலும் கணவர், மனைவி தங்களது இணையரின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருக்க முடியாது.
நடப்புகள் பற்றி இருவருக்கும் தெரியும் என்பதால் ஒரு கட்டம் வரை மட்டுமே இருவராலும் குறை சொல்வதை கேட்க முடியும். ஆனால் திரும்பத் திரும்ப குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அந்த கோபம் உங்கள் மீது திரும்ப வாய்ப்பிருக்கிறது. எனவே முடிந்தவரை குடும்பத்தை பற்றி குறை சொல்வதை நிறுத்திவிட்டு அந்த குறைகளை எப்படி சரி செய்யலாம் என நல்லவிதமாக பேசினால் எல்லா பிரச்னைகளும் சுமூகமாக தீரும். அதேபோல் ஒவ்வொரு பிரச்னையிலும் பேசாமல் இருக்கும்போதும் சரி, அதனை சரிசெய்யும்போதும் சரி யார் முதலில் போய் சமாதானம் பண்ண வேண்டும் என யோசிக்காமல் சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதுவே ஈகோவாக மாறி மனதளவில் பிரிவை உண்டாக்கி விடும். எனவே மகிழ்ச்சியான இல்வாழ்க்கை வாழ எப்போதும் தீர்வுகளை நோக்கி முன்னேறுங்கள்.