5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என சொல்வது ஏன் தெரியுமா?

நாம் எப்போதும் ஒரு கோயிலுக்குள் செல்லும் போதெல்லாம் நம் கண்ணில் முதலில் தெரிவது அந்த கோயிலின் கோபுரம் தான். கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோடி பாவ விமோசனம் என்ற கூற்றை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம். இந்த கோபுரத்தை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், ஏன் இவ்வளவு உயரமாக கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது என்பது பற்றி காணலாம். கோபுரங்களின் கலசங்களுக்கு மந்திர சக்தி உண்டு.

Spiritual: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என சொல்வது ஏன் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Sep 2024 21:00 PM

கோபுர தரிசனம்: நம்முடைய வாழ்க்கையில் இறைவனை வழிபடாத நாட்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். கோயிலில், வீட்டின் பூஜையறையில், நம்மை சுற்றிய இடங்களில் ஒவ்வொரு வீதி தொடங்கி மிகப்பெரிய கோயில்கள் வரை இறைவன் பல பெயர்கள், பல அவதாரங்களில் அருள்பாலித்து கொண்டிருக்கிறான். நம்மால் வருடம் முழுக்க கோயிலுக்கு செல்ல முடியாது. அதேசமயம் செல்ல முடியாத நாட்களில் ஏதேனும் கோயிலை கண்டால் கைகள் தானாக வணங்கி விடும். அதேபோல் நாம் எப்போதும் ஒரு கோயிலுக்குள் செல்லும் போதெல்லாம் நம் கண்ணில் முதலில் தெரிவது அந்த கோயிலின் கோபுரம் தான். கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோடி பாவ விமோசனம் என்ற கூற்றை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம். இந்த கோபுரத்தை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், ஏன் இவ்வளவு உயரமாக கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது என்பது பற்றி காணலாம்.

இதையும் படிங்க: Mini – Moon: அடடே..! இன்று முதல் பூமியில் இரண்டு நிலவுகள் தோன்றும்.. இதனை எப்படி பார்ப்பது?

இந்த கோபுரங்கள் என்பது 2 வகையான காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒன்று ஊரின் நன்மைக்காகவும், மற்றொன்று பக்தர்களின் நலனுக்காகவும் ஆகும். கோபுரத்திற்கும், ஊருக்கும் என்ன நன்மை என பார்த்தோமேயானால் அன்றைய காலக்கட்டத்தில் இடிதாங்கி என்பது தான் ஆலயத்தின் கோபுரமாக இருந்தது. கோபுரத்தில் வைக்கப்படும் கலசங்களில் வரகு எனப்படும் தானியத்தை நிரப்பி வைப்பார்கள். இடி, மின்னல் போன்ற இயற்கை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் கோபுரத்தை உயரே கட்டி இதனை அதில் கலசமாக பொருத்துவார்கள். இந்த செப்பு கலசம் அப்போதெல்லாம் கருங்காலி மரத்தின் கட்டையில் தான் செய்யப்படும். எவ்வளவு இடி, மின்னல் வந்தால் இந்த கலசம் தனக்குள் ஈர்த்து விடும். எக்காரணம் கொண்டும் ஊரின் நலனை பாதிக்காமல் இருக்கும்.

ஏன் பக்தர்களின் நலனுக்காக என பார்த்தால், நாம் கோயிலுக்கு சென்றாலே முதலில் பார்ப்பது கோபுரத்தை தான். அதனைப் பார்த்ததும் நம்முடைய கைகள் தானாக கையெடுத்து கும்பிடும். நாம் கோயினுள் சென்று சாமி பார்க்கப் போகிறோமே அதன்பிறகும் ஏன் இப்படி செய்கிறோம் என்றாவது நினைத்தது உண்டா?. காரணம் கோபுரங்களின் கலசங்களுக்கு மந்திர சக்தி உண்டு. 51 வகையான மூல மந்திரங்கள் என்பது உண்டு. இதனை எழுதி அதன்மேல் தான் கடவுளை பிரதிஷ்டை செய்கிறார்கள். இந்த மந்திரங்களுக்கு எப்போதும் ஈர்ப்பு தன்மை உண்டு. இது தூரத்தில் வருகிற நம் மனதை ஈர்க்கக்கூடிய தன்மை படைத்தது. நீங்கள் இந்த உலகில் எந்த கோயிலுக்கு சென்றாலும் நிச்சயம் கோபுரத்தைப் பார்த்து விட்டால் நம் கண்கள் வேறு எங்கும் செல்லாது. எப்படா சாமியை பார்ப்போம் என்ற எண்ணத்தை தானாக உருவாக்கி விடும். ஒருவேளை நீங்கள் அந்த பாதையாக வழியாக செல்பவர் என்றால் இயற்கையாகவே இறைவனை நீங்கள் வணங்குவது போன்ற எண்ணம் மனதில் தோன்றி விடும். இந்த ஈர்ப்பு சக்தி தன்மை வேறு எந்த கட்டடக்கலைக்கும் கிடையாது. இறைவனை நோக்கி நம்முடைய ஆன்மா செல்லும் நோக்கத்தில் கட்டப்பட்டது தான் கோபுரங்கள் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: Tiruchendur: வாழ்க்கையில் ஏற்றம்… திருச்செந்தூர் முருகன் கோயில் ரகசியம் தெரியுமா?

கோபுரம் என்பது வணங்குவதற்கு உரியது. மற்ற கட்டடக்கலைகள் ரசிப்பதற்குரியது. நாம் கோபுரத்தை வணங்கினாலே கோயிலின் உள்ளே கடவுளை வணங்கிய பலன்கள் நமக்கு கிடைக்கும். இறைவனை இருந்த இருந்த இடத்திலேயே வணங்கினாலே போதும். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எளியவர். ஆகவே கோயிலுக்கு போக முடியவில்லையே என எப்போதும் வருந்த வேண்டாம். கோபுரம் வணங்கினால் கோடி புண்ணியம் உங்களுக்கு கிட்டும். எனவே இனிமேல் எங்கு கோயில் கோபுரம் கண்டாலும் வணங்காமல் வராதீர்கள். நிச்சயம் அது பலன்களை நமக்கு கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. கோபுர தரிசனம் காணும் இடத்தில் குடியிருப்பதே பாக்கியம் என சொல்வார்கள். அப்படி புனிதமாக கருதும் கோபுரத்தை வணங்காமல் இருக்காதீர்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News