5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: 6 ராசிக்கு கடன் வாங்கினால் யோகம்.. காத்திருக்கும் வாய்ப்பு!

நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கும். இதில் ஒவ்வொரு விஷயத்துக்கும் நல்லது, கெட்டது என கணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்காலாம். அதில் கடன் ஒரு யோகமாக சொல்லப்படுகிறது. எப்படி என கேட்டால் வீடு, வாகனங்கள், வீடு பழுதுபார்ப்பு போன்றவற்றிற்காக வாங்கிய கடன்கள் தான் யோகங்கள் என்ற வகைப்படுத்தப்படுகின்றது. இந்த யோகத்தின் ஒரு பகுதி கடன் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் மறுபுறம் நம்முடைய வளர்ச்சிக்கும் உதவும் என நம்பப்படுகிறது.

Astrology: 6 ராசிக்கு கடன் வாங்கினால் யோகம்.. காத்திருக்கும் வாய்ப்பு!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 20 Aug 2024 18:28 PM

நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கும். இதில் ஒவ்வொரு விஷயத்துக்கும் நல்லது, கெட்டது என கணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்காலாம். அதில் கடன் ஒரு யோகமாக சொல்லப்படுகிறது. எப்படி என கேட்டால் வீடு, வாகனங்கள், வீடு பழுதுபார்ப்பு போன்றவற்றிற்காக வாங்கிய கடன்கள் தான் யோகங்கள் என்ற வகைப்படுத்தப்படுகின்றது. இந்த யோகத்தின் ஒரு பகுதி கடன் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் மறுபுறம் நம்முடைய வளர்ச்சிக்கும் உதவும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மீனம் ஆகிய ராசிகளுக்கு இந்த வருட இறுதியில் இந்த கடன் யோகம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் லாபகரமான முதலீடுகளுக்கு கடன் பெறுவார்கள். அவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறுவார்கள் என்பதைப் பார்க்கலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்கு 6-ம் அதிபதியான புதன் தற்போது 4 மற்றும் 5-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீடு அல்லது வாகனத்திற்கு கடன் கிடைக்கும். இந்த கடன் நிதி சிக்கலாக மாற வாய்ப்பில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும் என்பதால் கடன் வசதி எளிதில் கிடைக்கும். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், வீட்டுக் கடன் வாங்கி நீண்ட காலமாக அவதிப்படுபவர்கள் அந்த கடனில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் வெளியேறுவார்கள்.
  2. மிதுனம்: இந்த லக்னத்தின் ஆறாம் அதிபதி செவ்வாய் விரய வீட்டில் இருப்பதால் பொதுவாக சொத்துக்களுக்கு கடன் வாங்க வாய்ப்பு உண்டு. மனை சொத்துக்களில் முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை கிட்டும். இப்போது மனைகள், பண்ணைகள் மற்றும் வீடுகளுக்கு கடன் வாங்குபவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிதிப் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இவர்கள் மீதான கடன் சுமை நீண்ட காலம் நீடிக்காது.
  3. கடகம்: இந்த ராசிக்கு ஆறாம் அதிபதியான குரு சாதக நிலையில் இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து ஆதாயம் அடைவார்கள். அவர்கள் கடன் வாங்கி செய்யும் லாபகரமான முயற்சிகளில் அதிக முதலீடு செய்வார்கள். குரு லாப ஸ்தானத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும் எந்தக் கடனும் விரைவாக அடைக்கப்படும். வீடு மற்றும் வாகன வசதிகளுக்கும் கடன் கிடைக்கும்.
  4. கன்னி: ஆறாம் வீட்டு அதிபதி சனி இந்த ராசிக்கு கடன் ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாட்கள் கடன்கள் இருக்காது. பொதுவாக வீடு பழுதுபார்ப்பு, மருத்துவ சிகிச்சை, சுப காரியங்கள் போன்றவற்றுக்கு கடன் வாங்கப்படுகிறது, ஆனால் இந்த கடன் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை. வருமான வாய்ப்புகள் அதிகரிப்பதால் கடன் சுமை கூடுமானவரை குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் கடன்களை திட்டமிட்ட முறையில் கையாள்வர்.
  5. துலாம்: 6ம் வீட்டிற்கு அதிபதி குரு எட்டாவது வீட்டிலும், ராகு ஆறாம் வீட்டிலும் இருப்பதால், வீடு மற்றும் சொத்துக்களில் அதிக முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு  கடன்கள் மிகவும் எளிதாக கிடைக்கும். முறையான பரிசீலனை இல்லாமல் கடன் வாங்க வேண்டாம்.  இப்போது வாங்கிய கடனால் நிச்சயம் பலன் அடைவார்கள்.
  6. மீனம்: இந்த லக்னத்தின் ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பதால் வீடு, வாகனம் வாங்கக் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதற்கு இது ஒரு நல்ல நேரம். தொழில் மற்றும் வணிகங்களில் முதலீடும் செய்வது நல்லது. எங்கு, எப்படி முதலீடு செய்திருந்தாலும், கிரகங்களின் பலத்தால் அந்தக் கடன்களில் இருந்து விரைவில் விடுபடுவார்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News