5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: சிம்ம ராசிக்குள் நுழையும் சூரியன்.. 5 ராசிக்கு கொட்டப்போகும் யோகம்!

Sun Transit: ஆகஸ்ட் மாதத்தில், சூரிய பகவான் ஓராண்டுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் பிரவேசிக்கப் போவது மிகவும் விசேஷங்கள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல.. மற்ற ராசிக்காரர்களுக்கும்  மிகவும் நன்மை பயக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Astrology: சிம்ம ராசிக்குள் நுழையும் சூரியன்.. 5 ராசிக்கு கொட்டப்போகும் யோகம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 09 Aug 2024 17:10 PM

சூரிய பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில் நவ கிரகங்களுக்கும், ராசிகளின் நட்சத்திரங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதில் நவ கிரகங்களின் அதிபதி சூரிய பகவான் மாதம் ஒருமுறை தன் ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்நிலையில் சூரியன் விரைவில் சிம்ம ராசிக்கு மாறப் போகிறார். ஆகஸ்ட் மாதத்தில், சூரிய பகவான் ஓராண்டுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் பிரவேசிக்கப் போவது மிகவும் விசேஷங்கள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல.. மற்ற ராசிக்காரர்களுக்கும்  மிகவும் நன்மை பயக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது சூரியன் கடகத்தில் உள்ள நிலையில்  வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். அன்றைய நாளின் இரவு 07:53 மணிக்கு சிம்ம ராசியில் நுழையும் சூரியன் செப்டம்பர் 16 வரை நிலைகொண்டு இருப்பார். மேலும் ஆகஸ்ட் 22 வரை சூரியன், புதன், சுக்கிரன் சந்திப்பால் மிகப்பெரிய யோகம் உருவாகும். இந்த பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் பெறும் பலன்களை காணலாம்.

  1. மேஷம்: சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபத்துடன் புதிய வருமானங்கள் உருவாகும்.
  2. ரிஷபம்: சிம்ம ராசியில் சூரியனின் பிரவேசம் ரிஷப ராசியினருக்கும் மிகவும் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், மூலதன முதலீடுகளுக்கு இது ஒரு நல்ல நேரம். முதலீடுகள் லாபம் தரும்.
  3. கடகம்: கடக ராசிக்கு சூரிய சஞ்சாரம் முற்றிலும் ஏற்றது. கடக ராசியின் ஜாதகத்தில் சூரிய பகவான் நான்காவது வீட்டில் நுழைகிறார். பணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இவர்களுக்கு நிதி பலன்கள் வந்து சேரும். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
  4. சிம்மம்: சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய பகவான் தனது சொந்த ராசியில் நுழைவது அந்த ராசியை மிகவும் மங்களகரமானதாகவும் நன்மையானதாகவும் ஆக்குகிறது. இந்த காலகட்டத்தில், நீங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு திருமண யோசனைகள் வரலாம்.
  5. தனுசு: சூரிய பகவான் சிம்ம ராசியில் அடியெடுத்து வைப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்தது. சூரிய பகவான் தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இந்த காலகட்டத்தில், தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் முழுமையாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். தொழில், வியாபாரம் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை எல்லா இடங்களிலும் நேர்மறை சூழல் நிலவுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News