Astrology: பூசம் நட்சத்திரம் பிறந்தவர்களா நீங்கள்? – அப்ப கட்டாயம் படிங்க!
உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மனசாட்சிக்கு பயந்து நடப்பதாலும் இரக்க குணம் கொண்டதாலும் சிலர் அதனை பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். எனவே புதியவர்களிடம் பணம் முதலிய விஷயத்தில் கவனமாக இருங்கள். முடிந்தவரை மற்றவர்கள் பிரச்னையில் தலையீடாமல் இருங்கள். காரணம் பிரச்னை உங்கள் மேல் திரும்பும் வாய்ப்பும் உள்ளது.
பூசம் நட்சத்திரம்: மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிரக பலன்கள் அடிப்படையில் தான் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களும் இருக்கும். ஜோதிடத்தைப் பொறுத்தவரை 12 ராசிகள் உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரங்கள் என 12 ராசிக்கும் 27 நட்சத்திரங்கள் உள்ளது. இந்த நட்சத்திரங்கள் சில பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியிலும் சங்கமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூசம் நட்சத்திரம் சனி பகவானின் முதல் நட்சத்திரமாக திகழ்கிறது என்பது ஜோதிடத்தை அறிந்த அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் தகவல். இந்த நட்சத்திரம் கடக ராசியில் வரும் நிலையில் அதன் அதிபதியாக சந்திரன் உள்ளார். ஆனால் நவாம்சகத்தில் பார்க்கும்போது பூசம் நட்சத்திரத்திற்கும் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய நான்கு கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என சொல்லப்படுகிறது.
இந்த பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரிடத்திலும் அன்புக்குரியவர்களாக திகழ்வார்கள். அனைவராலும் விரும்பப்படும் நபராக இருப்பார்கள். மேலும் பக்தியில் மிகுந்தவர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் திகழும் பூசம் நட்சத்திரக்காரர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை அலசி ஆராய்ந்து தெளிவான ஒரு முடிவை தீர்வாக சொல்லும் அளவிற்கு சிறந்தவர்கள் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.
Also Read: WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!
மேலும் பெற்றவர்களை தன் இரு கண் போல காத்து அவர்களுக்கு பணிவிடை செய்பவர்கள் இந்த பூசம் நட்சத்திரத்திற்கு இணையானவர்கள் இல்லை என சொல்லலாம். புஷ்ய என்ற பெயர் தான் மருவி பூசம் என்ற ஆனதாக சொல்லப்படுகிறது. பூசத்தின் தேவதை பிரகஸ்பதி ஆகும். இதன் அனுக்கிரகம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு கிடைத்தது என்றால் அவர்கள் மிகுந்த சாதுர்யம் கொண்டவர்களாக திகழ்வார்கள். சொல்லிலும், செல்வத்திலும் உச்சநிலையை கொண்ட பூச நட்சத்திரக்காரர்களிடம் ஒவ்வொரு விஷயத்திலும் அறத்துடன் நிறைந்த செயல்பாடு இருக்கும்.
இவர்கள் அடிமட்டத்தில் இருந்தாலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கும் திறமைப் பெற்றவர்கள். எந்த விதமான நெருக்கடியும் சமாளிக்கும் திறமை இவர்களிடத்தில் உண்டு. தளராத தைரியமும் தன்னம்பிக்கை தான் பூசம் நட்சத்திரம் மக்களின் சிறப்பு அம்சமாகும். அடிக்கடி கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதால் கலைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மேலும் பிள்ளைகள் மீதும், மனைவி மீதும் மிகுந்த பாசம் உடையவர்களாக இருப்பார்கள்.
உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மனசாட்சிக்கு பயந்து நடப்பதாலும் இரக்க குணம் கொண்டதாலும் சிலர் அதனை பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். எனவே புதியவர்களிடம் பணம் முதலிய விஷயத்தில் கவனமாக இருங்கள். முடிந்தவரை மற்றவர்கள் பிரச்னையில் தலையீடாமல் இருங்கள். காரணம் பிரச்னை உங்கள் மேல் திரும்பும் வாய்ப்பும் உள்ளது. மேலும் பிரபலங்களுடன் நட்பாகும் வாய்ப்பு உங்களுக்கு அமையும்.
Also Read: Uttarpradesh: ஆன்லைனில் ஆர்டர்.. டெலிவரி இளைஞரை கொன்று ஐபோனை எடுத்துச்சென்ற இளைஞர்!
பூசம் நட்சத்திர காரர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மிகவும் யோகத்துடன் அமையும் என சொல்லப்படுகிறது. எனவே வாழ்க்கையில் இறக்கமான சூழல் வந்தால் கவலைப்படாதீர்கள். இது சனி பகவானின் நட்சத்திரம் என்பதால் ஆயுள் அதிகம். நீங்கள் பூசம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர் என்றால் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். இரண்டாம் பாதம் என்றால் பிறர் சொத்தை தனதாக்கிக்கொள்ளும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பீர்கள். மேலும் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் உலகளவில் மகிழ்ச்சியான நபராக திகழ்வீர்கள். நான்காவது பாதம் கொண்டவர்களாக இருந்தால் செல்வ சீமானாக இருப்பீர்கள் எனவும் சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்க்கும் படலம், மாங்கல்யம் மாற்றுதல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல், வீடு கட்டுதல், புதுமனை புகுவிழா, வாகனம் வாங்குதல், அறுவடை செய்தல், புதிய வேலையில் சேருவது ஆகியவை பூசம் நட்சத்திர நாளில் ஆரம்பித்தால் வெற்றி உண்டாகும் என சொல்லப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)