Aadi Masam: ஆடி செவ்வாய் விரதம்.. என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
Aadi Tuesday: ஆடி செவ்வாயில் முதலில் நாம் நம்முடைய குல தெய்வத்தை தான் வணங்க வேண்டும். அதன்பிறகு இஷ்டப்பட்ட அம்மனை வணங்கலாம். முடிந்தவர்கள் அன்றைய தினம் இருவேளை உணவு அருந்தாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் விரதம் இருக்கலாம்.
ஆடி செவ்வாய்: ஆடி மாதம் பிறந்தாலே நம் இல்லங்களிலும் தெய்வம் நேரடியாக குடிகொண்டு விடும் என சொல்வார்கள். அந்த அளவுக்கு பக்தி மாதமாக திகழும் இந்த நாள்களில் நாம் எந்த ஊர்களிலும் அருள்பாலிக்கும் அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். காரணம், அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷம் தான். இந்த நன்னாளில் நாம் அம்மனை நினைத்து விரதம் இருந்தால் பரிபூரண இறையருளைப் பெறலாம். இந்த ஒரு மாத காலத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய இருதினங்கள் மிக முக்கியமான நாட்களாகும். தமிழ் மாதங்களில் 4வது மாதமாக வரும் ஆடியில் தான் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிப்பதாக சொல்வார்கள். பருவ மழைக்கான தெய்வமாக கருதப்படுவதால் தான் ஆடியில் அம்மன் கோயில்களில் திருவிழாவும், கொண்டாட்டமும் நடைபெறுகிறது. அப்படியான ஆடி செவ்வாயில் எப்படி வழிபடலாம் என்பதை காணலாம்.
Also Read: Dream Theory : உங்கள் கனவில் பூரான் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஜாதக தோஷம் நீங்கும்
ஆடி செவ்வாயில் பெண்கள் விரதம் இருப்பதால் வீடு நலம் பெறும். மேலும் ஜாதகத்தில் இருக்கும் தடைகளும், தோஷங்களும் விலகும். முடிந்தவர்கள் வீட்டில் விளக்கேற்றி விட்டு அருகிலுள்ள கோயிலுக்கு செல்லலாம். இயலாதவர்கள் வீட்டில் அம்மன் படம் முன் மனதார வேண்டி விளக்கேற்றி வழிபடலாம். ஆடி செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என முன்னோர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அதிகாலையில் எண்ணெய் நீராடி, இரண்டு விளக்குகளில் விளக்கெண்ணெய் அல்லது பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி அதனை அம்மனின் ஒருபுறமும் வைத்து விளக்கேற்ற வேண்டும். மேலும் சாம்பிராணி தூபம் போட்டு, சூடம் காட்டி பூஜையறை மட்டுமல்லாமல் வீடு முழுவதும் பக்தி மணம் கமழும்படி செய்ய வேண்டும்.
Also Read: Siruvapuri: சொந்த வீடு கனவை நனவாக்கும் சிறுவாபுரி முருகன் கோயில்!
ஆடி செவ்வாயில் முதலில் நாம் நம்முடைய குல தெய்வத்தை தான் வணங்க வேண்டும். அதன்பிறகு இஷ்டப்பட்ட அம்மனை வணங்கலாம். முடிந்தவர்கள் அன்றைய தினம் இருவேளை உணவு அருந்தாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் விரதம் இருக்கலாம். மாலையில் அம்மனுக்கு பிடித்த கூழ், சர்க்கரை பொங்கல், பாயாசம், கேசரி என விரதம் இருப்பவர்கள் தங்களால் என்ன முடியுமோ அதனைப் படைக்கலாம். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்தால் வீட்டின் அருகே இருப்பவர்களுக்கு மஞ்சல், குங்குமம், தாலிக்கயிறு வழங்கலாம்.
ஆடி செவ்வாயில் விரதம் இருப்பது திருமண தடை, குழந்தை இல்லாமை, தொழிலில் இன்னல்கள் போன்றவற்றை போக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலை உண்டாக்கும் என்பது காலம் காலமாக நம்பிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது.