5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vaiyamkatta Perumal: பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் “வையம் காத்த பெருமாள் கோயில்”!

Temple special: ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்றும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஜகத்ரட்சக பெருமாள் தாயார் பத்மாசனியுன் அருள் பாலிக்கிறார். இந்த கோயில் மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இது எட்டாவது தலமாகும். இந்த கோயில் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

Vaiyamkatta Perumal: பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் “வையம் காத்த பெருமாள் கோயில்”!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Jul 2024 19:11 PM

திருக்கூடலூர்: வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்காத மனிதனே இல்லை. பிரச்னை இல்லாவிட்டால் அவன் மனிதனே இல்லை என சொல்வார்கள். அப்படியான நிலையில் இல்வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், சில நேரங்களில் அது தம்பதியினரிடையே மிகப்பெரிய அளவில் பிரிவினையை உண்டாக்கி விடும். இது தற்காலிக அல்லது நிரந்தர பிரிவினையாக இருக்கக்கூடாது என நாம் கடவுளிடம் தான் வேண்டுவோம். இப்படி இல்வாழ்க்கையில் சிக்கலை சந்தித்து வரும் மக்கள் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போய் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அப்படியான வையம் காத்த பெருமாளை பற்றி நாம் இச்செய்தியில் காண்போம்.

இதையும் படிங்க: Thiruttani: அப்படிப்போடு.. திருத்தணி முருகன் கோயில் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

எப்படி செல்லலாம்?

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பேருந்து, ரயில் மூலமாக வரலாம். சரியாக திருவையாரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 8வது தலமாகும்.

இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்றும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஜகத்ரட்சக பெருமாள் தாயார் பத்மாசனியுன் அருள் பாலிக்கிறார். இந்த கோயில் மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இது எட்டாவது தலமாகும். இந்த கோயில் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

கோயிலின் வரலாறு

 

பூமியில் உள்ள மக்களுக்கு இரண்யாட்சகன் என்ற அசுரன் பல தொல்லைகளை கொடுத்து வந்தான். ஒருமுறை பூமாதேவியுடன் ஏற்பட்ட சண்டையால் பூமியை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தான். அப்போது திருமால் வராக அவதாரம் எடுத்து தரையை உடைத்து அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியை மீட்டு வெளியில் வந்தார். பூமியை மீட்டதால் இவர் வையம் காத்த பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

Also Read: Chanakya Niti: வாழ்க்கையில் பணப்பிரச்னையா? – இந்த 4 வழியை ஃபாலோ பண்ணுங்க!

கோயிலின் சிறப்புகள்

 

இந்த கோயிலில் கையில் செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வையம் காத்த பெருமாள் அருள்பாலிக்கிறார். மேலும் பத்மாசினி, வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்களுக்கு தனி சந்நிதிகளும் உள்ளது. கருவறைக்கு பின்புறத்தில் உள்ள பலா மரத்தில் சங்கு வடிவம் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலில் பெருமாளுக்கு கற்கண்டு, வெண்ணெய் வைத்து படைத்தால் இல்லத்தில் செல்வம் பெருகும், இல்லறத்தில் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். குறிப்பாக பிரிந்திருக்கும் தம்பதிகள் சேருவார்கள் என்பது நம்பிக்கையாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் நவக்கிரங்களை பொறுத்தவரை கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் 108 தாமரை மலர்களுடன் ‘ஸ்ரீசுக்த ஹோமம்’ நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News