Vastu Tips : வீட்டில் மணி பிளான்ட் வளர்க்குறீங்களா? எந்த திசையில் எப்படி வளர்க்கணும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதுதான்!
Money Plant: பொதுவாக வாஸ்து சாத்திரத்தில் வீட்டில் துளசி மற்றும் மணி பிளான்ட் செடிகளை வைத்திருப்பது மிகவும் மங்களக்கரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மணி பிளான்ட் செடியில் வாடிய இலைகள் இருப்பதை கண்டால் அதனை கிள்ளி எறிய வேண்டும். வாடிய இலைகள் எப்போதும் எதிர்மறையான சக்திகளை கொண்டிருக்கும். உடனடியாக அதனை பசுமையாக வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மணி பிளான்ட்: பலருக்கும் வீடுகளில் செடி வளர்க்க பிடிக்கும். சில செடிகள் அழகுக்காகவும், சில செடிகள் ஆன்மீக அல்லது ஆரோக்கிய ரீதியாகவும் வளர்க்கப்படுகிறது. அப்படி வீட்டில் நேர்மறையான சக்தியை பரப்பும் என கருதப்படக்கூடிய மணி பிளான்ட் செடிகள் இன்றைக்கு நகரம், கிராமம் என வித்தியாசமில்லாமல் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. அழகுக்காக வைக்கப்பட்டாலும் இதனால் வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும். அதேசமயம் மணி பிளான்ட் தாவரம் காற்று மாசுபாட்டை குறைத்து உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்பதால் தான் இதனை வீட்டு வாசல்கள், பால்கனி, முற்றம் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கிறார்கள். ஆனால் இந்த செடியை நாம் எந்த திசையில் வைத்தால் பலன்கள் கிடைக்கும் என்ற கேள்வி சிலருக்கு இருக்கும். அதனைப் பற்றி நாம் இந்த செய்தியில் காணலாம்.
பொதுவாக வாஸ்து சாத்திரத்தில் வீட்டில் துளசி மற்றும் மணி பிளான்ட் செடிகளை வைத்திருப்பது மிகவும் மங்களக்கரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மணி பிளாண்ட் செடிகளை வீட்டில் வளர்ப்பது வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும். நிதி சிக்கலில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் சக்தியை இந்த தாவரம் வழங்குகிறது. ஆனால் மணி பிளான்ட் செடிகளை தவறான திசையில் வைத்தால் வீட்டில் பிரச்சினைகள் போன்ற எதிர்மறையான சம்பவங்கள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
Also Read: Vastu Tips : காலை கண் விழித்ததும் பார்க்கக் கூடாது விஷயங்கள்.. வாஸ்து சாஸ்திர விவரங்கள்!
என்ன செய்யக்கூடாது?
முதலில் வீட்டின் வடகிழக்கு திசையில் மணி பிளான்ட் செடியை வைக்கவே கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது எதிர்மறையான திசையாக பார்க்கப்படுகிறது. அங்கு வைப்பது நெருப்பில் நடப்பதற்கு சமமாகும்.நாம் எந்த பிரச்னையையும் கடப்பது நெருப்பின் மீது நடப்பதற்கு சமம் என்பதை இது குறிக்கிறது. இது பண விரதயத்தையும் உண்டாக்கும். அதேபோல் கிழக்கு – மேற்கு திசைகளில் வைக்கக்கூடாது. இது கணவன், மனைவி உறவுக்குள் மிகப்பெரிய சிக்கல் அல்லது விரிசலை உண்டாக்கி விடும். மேலும் மன அழுத்தம் போன்ற பிரச்னையும் ஏற்படுத்தலாம்.
Also Read: Vastu Tips: இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் பணம் கொழிக்கும்!
அதேசமயம் மணி பிளான்ட் செடியில் வாடிய இலைகள் இருப்பதை கண்டால் அதனை கிள்ளி எறிய வேண்டும். வாடிய இலைகள் எப்போதும் எதிர்மறையான சக்திகளை கொண்டிருக்கும். உடனடியாக அதனை பசுமையாக வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். தினமும் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். முக்கியமாக மணி பிளான்ட் செடியை தரையில் படரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் மந்தமான சூழல் உண்டாகும். அதேபோல் மணி பிளான்ட் செடியை வீட்டில் வெளியேவும் வளர்க்கக்கூடாது. அதனை சுற்றி எப்போதும் சுத்தமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
என்ன செய்யலாம்?
மணி பிளான்ட் செடிகளை எப்போதும் தென்கிழக்கு திசையில் தான் வளர்க்க வேண்டும். விநாயகப்பெருமான் வசிக்கும் இந்த திசை செழிப்பையும்,மன மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)