8வது மாத சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டால் அரசு ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.51,480 ஆக உயரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு, 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில், அடுத்த ஊதியக் குழுவைப் பற்றிய விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
2014 பிப்ரவரியில் மன்மோகன் சிங் ஆட்சியில் 7வது ஊதியக்குழு உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் குறிப்பிடத்தக்க திருத்தங்களைக் கொண்டு வந்தன.
கடந்த காலங்களில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை மறுபரிசீலனை செய்யவும், மாற்றியமைக்கவும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கு அதிக லாபத்தை தரும் எஸ்பிஐ வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டம்