5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navarathri : நவராத்திரியின் போது அம்மனுக்கு எந்த நிற ஆடையை அணிந்து வழிபட வேண்டும்?

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ரவராத்திரி விழாவுக்கான நாட்கள் நெருங்க உள்ளது. இந்த ஒன்பது நாள் திருவிழாவில் ஜெகன் தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. இந்த நவராத்திரி விழாவில் நவ துர்க்கைக்கு விருப்பமான நிறத்தில் புடவை அல்லது ஆடை அணிந்து அம்மனை வழிபடலாம். அப்படியென்றால் நவராத்திரி விழாவில் என்ன நிற புடவை அணிய வேண்டும். நிறத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 23 Sep 2024 08:33 AM
முதல் நாள், காவி நிறம் அல்லது ஆரஞ்சு நிறம்: நவராத்திரியின் முதல் நாளில், கலசம் நிறுவப்பட்டு, நவராத்திரி விழாக்கள் தொடங்குகின்றன. இந்நாளில் தேவி ஷைலபுத்ரி என்று போற்றப்படுகிறாள். ஆரஞ்சு ஷைலபுத்ரிக்கு மிகவும் பிடித்த நிறம். இந்த நாளில் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து அம்மனை வழிபடலாம்.  ஆரஞ்சு நிறம் ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது என்பது இந்த நிறத்தின் முக்கியத்துவம். நேர்மறை ஆற்றலை கடத்துகிறது.

1 / 9
இரண்டாம் நாள், வெள்ளை நிறம்: நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள், அம்மன் பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறார். இந்நாளில் அம்மன் வெண்ணிற ஆடை அணிந்து வழிபடப்படுகிறார். ஏனென்றால் பிரம்மசாரிணி தேவிக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும்.  வெள்ளை நிறம் தூய்மை மற்றும் அமைதியின் சின்னமாகும். வெள்ளை நிறம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

2 / 9
மூன்றாம் நாள், சிவப்பு: நவராத்திரி கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளில் சந்திரகாண்டா தேவி வழிபடப்படுகிறாள். இந்த நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது என்று கூறப்படுகிறது. சிவப்பு நிறம் ஜகன்மாதாவுக்கு மிகவும் பிடித்த நிறமாக கருதப்படுகிறது.  சிவப்பு வலிமை மற்றும் அன்பின் சின்னமாகும்.

3 / 9
நான்காம் நாள், அடர் நீலம்: துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றான குஷ்மாண்டா தேவி, நவராத்திரியின் நான்காவது நாளில் வழிபடப்படுகிறாள். கூஷ்மாண்டா தேவிக்கு மிகவும் பிடித்த நிறம் அடர் நீலம். இந்த நாளில் கருநீல நிற ஆடைகள் அணிந்து அம்மனை வழிபடுவது நல்லது. அடர் நீல நிறம் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் குறிக்கிறது.

4 / 9
ஐந்தாம் நாள்: மஞ்சள்: ரவராத்திரத்தின் ஐந்தாம் நாளில் ஸ்கந்தா தேவி வழிபடப்படுகிறாள். மேலும் இந்த ஐந்தாம் நாளில் அம்மனுக்கு மஞ்சள் புடவை அலங்காரம் செய்யப்படுகிறது. மஞ்சள் ஆடை அணிந்து அம்மனை வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த நிறத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், மஞ்சள் மகிழ்ச்சி, உற்சாகம், நேர்மறை ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், மஞ்சள் என்பது அதிர்ஷ்டத்தின் அடையாளம்.

5 / 9
ஆறாம் நாள், பச்சை நிறம்: நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயினி தேவியை வழிபடுகிறார்கள். இந்த நாளில் பச்சை நிற ஆடைகளை அணிவது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. பச்சை நிறம் முக்கியத்துவம் பச்சை என்பது புதிய தொடக்கங்கள், மிகுதி, செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும்.

6 / 9
ஏழாம் நாள் சாம்பல் நிற ஆடை: தேவியின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றான காலராத்திரி இந்நாளில் வழிபடப்படுகிறது. எல்லாவிதமான எதிர்மறை சக்திகளையும் தீய சக்திகளையும் அழிக்க காலராத்திரி வழிபடப்படுகிறது. இந்த நாளில் சாம்பல் நிற ஆடை அணிந்து ஜெகன்மாதாவை வழிபடுவது என்பது ஐதீகம். இந்த நிறத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், சாம்பல் உணர்ச்சிகளை ஒத்திசைக்கிறது.

7 / 9
எட்டாம் நாள் ஊதா: நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி வழிபடப்படுகிறாள். மஹாகௌரியை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் அனைத்து தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம். மஹாகௌரிக்கு மிகவும் பிடித்த நிறம் ஊதா. இந்த நிறம் செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது.

8 / 9
ஒன்பதாம் நாள் மயில் பச்சை நிறம்: நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒன்பதாம் நாளில் சித்திதாத்ரி தேவி வழிபடப்படுகிறாள். இந்நாளில் அம்மனை மயில் பச்சை உடையணிந்து வழிபடுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது. இந்த நிறத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, இது இரக்கத்தின் சின்னமாகும்.

9 / 9
Latest Stories