5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC Group 2 Exam: குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்.. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதாவது, குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு 2,327 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Dec 2024 09:42 AM
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு வகைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம். மேலும் பணியிடங்கள் குறிந்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1 / 5
குரூப் 2, 2ஏ தேர்வின் மூலம் உதவி ஆய்வாளர்,  சார் பதிவாளர், சிறப்பு உதவியார், வனவர், உதவிப்பிரிவு அலுவலர், நிரலர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327  காலிப்பணியிடங்களை நிரப்பு தேர்வு நடத்தப்பட்டது. குரூப் 2 பணியிடங்களுக்கான  முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

2 / 5
இந்த தேர்வை 7.93 லட்சம் பேர் எழுதிய நிலையில், 5.81 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், இந்தாண்டு குரூப் 2, 2ஏ பேணியிடங்களுக்கு ஒரே முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும். முதன்மை தேர்விற்கனா புதிய பாடத்திட்டத்தை அண்மையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.  இந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

3 / 5
அதாவது, குரூப் 2  மற்றும் 2ஏ பணிகளுக்கு 2,327 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 2,540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 / 5
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தால் அந்த தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. இதனால் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும் என மாணவர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளும் அரசு பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும் என   வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான சூழலில்,  குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களை  213 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

5 / 5
Latest Stories