கன்னட சீரியல் டூ தமிழ் சீரியல்… கலக்கும் நடிகை சைத்ரா ரெட்டி!
Chaitra Reddy: தமிழ் சின்னத்திரையில் ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ’யாரடி நீ மோகினி‘ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி. ’யாரடி நீ மோகினி‘ சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.