5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Raksha Bandhan 2024: ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்.. ஒரே விளையாட்டில் கலக்கிய சகோதர – சகோதரிகள் லிஸ்ட்!

Sports: ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு இன்று ஒரே விளையாட்டில் சிறந்து விளங்கும் சகோதர - சகோதரி பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா - அவரது சகோதரி வைஷாலி, அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களான லாரா டெலானி மற்றும் கரேத் டெலானி, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை சேர்ந்த அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் வில் சதர்லேண்ட் உள்ளிட்ட பல விளையாட்டு பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Aug 2024 11:37 AM
ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அக்கா மற்றும் தங்கைகள் தங்கள் அன்பான சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், இன்று ஒரே விளையாட்டில் சிறந்து விளங்கும் சகோதர - சகோதரி பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

1 / 7
அந்தவகையில் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா - அவரது சகோதரி வைஷாலி, அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களான லாரா டெலானி மற்றும் கரேத் டெலானி, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை சேர்ந்த அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் வில் சதர்லேண்ட் உள்ளிட்ட பல விளையாட்டு பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

2 / 7
உலகளவில் பிரபலமான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகியோர் கிராண்ட்மாஸ்டர் பட்டங்களை வென்ற முதல் சகோதரன் மற்றும் சகோதரி ஆவர். கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரனும், சகோதரியும் இவர்களே. இவர்கள் இருவரும் செஸ் உலகில் கலக்கி வருகின்றனர்.

3 / 7
சாரா மெக்லாஷன் 2002 முதல் 2016 வரை நியூசிலாந்திற்காக விளையாடிய ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகள், 134 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இவரது சகோதரான பீட்டர் மெக்லாஷன் நியூசிலாந்து அணிக்காக 4 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

4 / 7
அயர்லாந்து கேப்டன் லாரா டெலானி ஒருநாள் போட்டியில் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவரது 27 வயதான சகோதரர் கரேத் டெலானி அயர்லாந்து அணிக்காக 21 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

5 / 7
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான அன்னாபெல் சதர்லேண்ட் தனது அதிவேக இரட்டை சதத்தால் கிரிக்கெட் உலகில் பிரபலமானவர். இவர் கடந்த  பிப்ரவரி 1ம் தேதி ஆஸ்திரேலியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார். இவரது சகோதரர் வில் சதர்லேண்ட் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான  ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

6 / 7
டோலா பானர்ஜி கடந்த 1990ம் ஆண்டு முதல் இந்திய வில்வித்தை வீராங்கனையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பை ரிகர்வ் போட்டியில் தனிநபர் தங்கமும், 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாடு போட்டியில் தங்கமும் வென்றார். இவரது இளைய சகோதர் ராஹுல் 2010 காமன்வெல்த் போட்டியில் ஆடவர்களுக்கான ரிகர்வ் பிரிவில் தனிநபர் தங்கம், மேலும் அந்த ஆண்டு குவாங்சோவில் நடந்த அணியில் வெண்கலம் வென்றார்.

7 / 7
Follow Us
Latest Stories