PAK vs BAN: சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோல்வி.. வரலாறு படைத்த வங்கதேச அணி..!
Pakistan: பாகிஸ்தானை தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை வங்கதேச அணி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன், ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக ஆடுகளத்தை பிசிபி தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.