5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Rains: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

Weather Update : வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 23 Nov 2024 07:33 AM
தமிழ்நாட்டில் அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. அதற்கு முன்னதாக 14ஆம் தேதியே சென்னையில் கனமழை பெய்தது. அதற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அதேநேரத்தில் காற்றின் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்தது. ஆனால், மாநிலம் முழுவதும் இதுவரை அடைமழை பெய்யவில்லை. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பற்றாக்குறை மழையே நிலவி வருகிறது.

1 / 5
இந்த நிலையில், வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக மத்திய மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. முதலில் நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இப்போது கடந்த 2 தினங்களாக ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

2 / 5
இந்த நிலையில்,   தெற்கு அந்தமான கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்து தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

3 / 5
வரும் 25ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும. மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோடை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், வரும் 26ஆம் தேதி கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 / 5
மேலும், வரும் 26ஆம் தேதி காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. வரும் 27ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

5 / 5
Latest Stories