தேசிய விருது பெற்ற நாயகிதான் இந்த சிறுமி… நீங்க கண்டுபிடிச்சீங்களா?
Actress Nithya Menon: நித்யா மேனன் ஒரு பத்திரிகையாளராக விரும்பினார் என்பது மிகச் சிலருக்குத் தெரியும், ஆனால் விதி வேறு எதையாவது மனதில் வைத்திருந்தது. நித்யா மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷனில் பத்திரிக்கை துறையில் பட்டம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தவர் நித்யா மேனன்.