பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமிழில், ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்போது அவர் 'பைரதி ரணங்கள்’ படத்தில் நடித்துள்ளார். சிவராஜ்குமார் உடன் ருக்மணி வசந்த், ஷபீர் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் கன்னட திரைப்படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.