தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அழகுக்கு பெயர் பெற்றவை. ஒரு அழகிய மலைப்பகுதியான இங்கு ரிகள், பூங்காக்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் பார்க்கவே அவ்வளவு அழகாக காட்சியளிக்கும். இங்குள்ள குளிர்ந்த காற்றும் அமைதியான சூழ்நிலையும் மனதிற்கு மிகுந்த அமைதியை அளிக்கிறது. கொடை ஏரி, பிரையன்ட் பூங்கா மற்றும் குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள் ஆகும்.