5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ஜாம்பவானை குறிவைத்து தூக்கிய லக்னோ.. வழிகாட்டியாக களமிறங்கும் ஜாகீர் கான்..!

Zaheer Khan: ஐபிஎல் 2025 சீசன் தொடங்க இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், பல அணிகள் தங்கள் அணியை வலுப்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்பாலவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஜாகீர் கானை வழிகாட்டியாக நியமித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக கௌதம் கம்பீர் இருந்து வந்தார்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 28 Aug 2024 18:34 PM
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025க்கான மெகா ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளின் வீரர்களை தக்கவைப்பது தொடர்பான விதிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

1 / 7
ஐபிஎல் 2025 சீசன் தொடங்க இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், பல அணிகள் தங்கள் அணியை வலுப்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில்  ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்பாலவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஜாகீர் கானை வழிகாட்டியாக நியமித்துள்ளது.

2 / 7
கடந்த 2023ம் ஆண்டு வரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக கௌதம் கம்பீர் இருந்து வந்தார். ஆனால், கடந்த சீசனில் கௌதம் கம்பீர் லக்னோ அணியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா அணியின் இணைந்தார். அந்த அணி அதன்பிறகு சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

3 / 7
கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு சென்ற பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வழிகாட்டி இடம் காலியாகவே இருந்தது. எனவே, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, லக்னோ அணி ஜாகீர் கானை வழிகாட்டியாக நியமித்துள்ளது.

4 / 7
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீன் கான், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும், 45 வயதான ஜாகீன் கான் ஐபிஎல்லில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

5 / 7
இந்திய அணியின் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாகீர் கானின் பெயர் முக்கியமானது. கடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 21 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

6 / 7
ஜாகீன் கான் இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்களும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்களையும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஜாகீன் கான் இந்திய அணிக்காக 2000ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 / 7
Follow Us
Latest Stories