பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்து இருக்கும் கவுண்டம்பாளையம் படம் பல பிரச்சனைகளை தாண்டி நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.