5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lakshya Sen: வெண்கலத்தை தவறவிட்ட லக்‌ஷயா சென்.. இந்தியாவுக்கு 4வது பதக்கம் மிஸ்..!

Paris Olympic 2024: லக்‌ஷயா சென், மலேசிய வீரருக்கு எதிரான முதல் கேமை 12-13 என்ற கணக்கில் மிக எளிதாக வென்றிருந்தார். அதில், நிறைய ஷாட்கள் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் இருந்தது. இரண்டாவது கேமில், லக்‌ஷயா சென் முழங்கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு ஆட்டம் தொடங்கிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் 16-21 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார் லக்‌ஷயா சென்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Aug 2024 20:33 PM
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதை லக்‌ஷயா சென் தவறவிட்டார். இதன்மூலம், இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய 4வது பதக்கம் மிஸ் ஆனது. உலக தரவரிசையில் நம்பர்-2 வீரரும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனுக்கு எதிரான அரையிறுதியில் லக்ஷயா சென் கடுமையான போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 7
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்தியாவை சேர்ந்த லக்‌ஷயா சென்னும், மலேசியாவை சேர்ந்த ஜியா லீயும் மாலை 6 மணிக்கு களமிறங்கினர். இந்த போட்டியில் எப்படியாவது லக்‌ஷயா சென் வெற்றி பெற்று இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை பெற்று தருவார் என இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர்.

2 / 7
இந்த போட்டியில் மலேசியா பேட்மிண்டன் வீரர் ஜியா லீயிடம் 21-13, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய நட்சத்திர வீரர் லக்‌ஷயா சென் தோற்கடிக்கப்பட்டார். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

3 / 7
கடந்த மூன்று ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பேட்மிண்டனில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், இந்த முறை பதக்கம் வெல்ல முடியாமல் வெளியேறினர். வெண்கல போட்டியின்போது, லக்‌ஷயா சென்னின் முழங்கையில் தொடர்ந்து ரத்தம் கசிந்தாலும், இறுதி வரை போராடி வீழ்ந்தார்.

4 / 7
லக்‌ஷயா சென், மலேசிய வீரருக்கு எதிரான முதல் கேமை 12-13 என்ற கணக்கில் மிக எளிதாக வென்றிருந்தார். அதில், நிறைய ஷாட்கள் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் இருந்தது.

5 / 7
இரண்டாவது கேமில், லக்‌ஷயா சென் முழங்கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு ஆட்டம் தொடங்கிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் 16-21 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார் லக்‌ஷயா சென்.

6 / 7
மூன்றாவது கேமில், லக்‌ஷயா சென்னின் காயம் அவருக்கு பெரிய தொல்லையாக இருக்க, இறுதியில் 11-21 என்ற கணக்கில் கடைசி கேமை இழந்தார். இதையடுத்து, வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

7 / 7
Follow Us
Latest Stories