Mumbai indians: ரோஹித் சர்மா உள்பட 4 வீரர்களை கழட்டிவிடுகிறதா மும்பை இந்தியன்ஸ்? அடுத்த கேப்டன் யார்?
IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் சூர்யகுமார் யாதவை தக்கவைத்துக்கொண்டு அடுத்த சீசனுக்கான புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் நியமிக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.