5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs ENG Test: இங்கிலாந்தில் சம்பவம் செய்யுமா இந்தியா? டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ!

India vs England: இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இதையடுத்து, இந்த தொடரையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி சரித்திரம் படைக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கடைசியாக 2021ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது 2-2 என டெஸ்ட் தொடரை டிரா செய்தது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Aug 2024 19:31 PM
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று வெளியிட்டது. இந்த சுற்றுப்பயணம் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும்.

1 / 7
இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சற்று முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025க்கான போட்டியில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகளும் உள்ளன.

2 / 7
கடந்த 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி காத்திருக்கிறது. கடைசியாக 2021ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது 2-2 என டெஸ்ட் தொடரை டிரா செய்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 / 7
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இதையடுத்து, இந்த தொடரையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி சரித்திரம் படைக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

4 / 7
இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி ஸ்டேடியத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் ஜூலை 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.

5 / 7
மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஜூலை 10 முதல் 14 வரை நடக்கிறது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறுகிறது.

6 / 7
இந்தியா - இங்கிலாந்து இடையிலான தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் ஸ்டேடியத்தில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ளது.

7 / 7
Follow Us
Latest Stories