5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Virat Kohli: 147 ஆண்டுகளில் முதல்முறை.. மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் விராட் கோலி!

Ind vs Ban: விராட் கோலி 27,000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே உள்ளது . இந்த ரன்களை எடுத்தால், 600 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை எட்டுவார். இதுவரை இந்த சாதனை 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் இருந்தது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 04 Oct 2024 09:03 AM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது. ரோஹித்  தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, வங்கதேசத்திற்கு எதிராக வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

1 / 6
இந்தியா - வங்கதேசம் இடையிலன டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு குறிப்பிட்ட வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார். வெறும் 59 ரன்கள் எடுத்தால் 147 ஆண்டுகால சாதனையை கோலி முறியடித்து, தலை சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மீண்டும் ஒருமுறை பெறுவார்.

2 / 6
விராட் கோலி 27,000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே உள்ளது . இந்த ரன்களை எடுத்தால், 600 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை எட்டுவார். இதுவரை இந்த சாதனை 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் இருந்தது.

3 / 6
சச்சினின் இந்த சாதனையை முறியடிப்பதன் மூலம், விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத முடியும். விராட் கோலி இதுவரை 591 சர்வதேச இன்னிங்ஸ்களில் 26,942 ரன்கள் எடுத்துள்ளார்.

4 / 6
147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் குமார் சங்கக்கார ஆகியோர் மட்டுமே 27,000 ரன்களை தொட்டுள்ளனர். 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் 600 இன்னிங்ஸ்களுக்கு குறைவாக 27000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

5 / 6
விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் 8848 ரன்களும், 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13906 ரன்களும்,  125 சர்வதேச டி20 போட்டியில் 4188 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், தற்போது வரை விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 26,942 ரன்கள் எடுத்துள்ளார்.

6 / 6
Latest Stories