5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ICC ODI Rankings: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2வது இடம்.. 37 வயதில் கெத்துக்காட்டிய ரோஹித் சர்மா!

Rohit Sharma: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் 765 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 763 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 746 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர். ஐசிசியின் முதல் 20 வீரர்கள் தரவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 16வது இடத்திலும், கேஎல் ராகுல் ஒரு இடம் சரிந்து 21வது இடத்திலும் உள்ளனர்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 14 Aug 2024 18:46 PM
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடருக்குப் பிறகு புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

1 / 7
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தாலும், 37 வயதான் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்களுடன் 52.33 சராசரியில் 157 ரன்கள் குவித்தார். இதுவே, ரோஹித் சர்மா தரவரிசையில் 2வது இடத்தை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

2 / 7
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் 765 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 763 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 746 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

3 / 7
ஐசிசியின் முதல் 20 வீரர்கள் தரவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 16வது இடத்திலும், கேஎல் ராகுல் ஒரு இடம் சரிந்து 21வது இடத்திலும் உள்ளனர். வேறு எந்தவொரு வீரர்களும் சொல்லும்படியான இடங்களில் இல்லை.

4 / 7
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் 716 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (688) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா (686) 3வது இடத்திலும் உள்ளனர்.

5 / 7
இந்த பந்துவீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் குல்தீப் யாதவ் (665) நான்காவது இடத்திலும், நமீபியாவின் பெர்னார்ட் ஷால்ட்ஸ் (657) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

6 / 7
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எட்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக, ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்த முகமது சிராஜ் ஐந்து இடங்களை இழந்து நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட்டுடன் கூட்டாக ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

7 / 7
Follow Us
Latest Stories