5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Back pain: முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த இயற்கை குறிப்பு மூலம் சரி செய்யலாம்!

Tips for back pain: சமீப காலமாக முதுகு வலியால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, சுமை தூக்குவது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் முதுகு வலியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதுகு வலியை இயற்கையான சில குறிப்புகள் மூலம் வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 30 Nov 2024 22:18 PM
மாறிவரும் வாழ்க்கை முறையால் தற்போது முதுகு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, உணவு முறை மாற்றம் போன்ற காரணங்களால் முதுகு வலியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்

1 / 5
குறிப்பாக பெண்களுக்கு முதுகு வலி அதிகம் ஏற்படுகிறது. பிரசவ காலங்களில் ஏற்படும் முதுகு வலி பிரசவத்திற்கு பிறகும் தொடர்கிறது. நீண்ட நேரம் ஒரே நேரத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஆண்களுக்கும் இந்த பிரச்சினை அதிகளவில் ஏற்படுகிறது. சில எளிமையான இயற்கை குறிப்புகள் மூலம் வீட்டிலேயே முதுகு வலியை குறைக்கலாம்.

2 / 5
முதுகு வலியை குறைக்க ஐஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழி உள்ள இடங்களில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஒற்றடம் கொடுத்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இல்லையெனில் ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு வலி உள்ள இடத்தில் வைத்து எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சூடான தண்ணீர் பாட்டில் அல்லது ஹீட் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவும் வலியை குறைக்க முடியும். இதன் மூலம் பதட்டமான நரம்புகள் தளர்ந்து வழி குறையும்.

3 / 5
துளசி மற்றும் இஞ்சி வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு துண்டு இஞ்சி மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு துளசி மற்றும் இஞ்சி துண்டுகளை எடுத்துவிட்டு குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் வலி நீங்கும். மேலும் வலியுள்ள இடத்தில் மஞ்சள் தேய்த்தால் வலி குறையும். மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் வீக்கம் மற்றும் வலியை நீக்குகிறது.

4 / 5
உப்பு மற்றும் கடுக்காய் சேர்த்து வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முதுகு வலி குறையும். ஆமணக்கு எண்ணையில் சிறிது உப்பு சேர்த்து சூடாக்க வேண்டும். பிறகு வலியுள்ள இடத்தில் அந்த எண்ணெய் தடவி வந்தால் முதுகுவலி குறையும். இதனுடன் சிறிது உடற்பயிற்சியையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

5 / 5
Latest Stories