'குஷி' படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் ஜோதிகா. இதே ஆண்டில் ஜோதிகாவை நடிகையாக அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இயக்கத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த 'சிநேகிதியே' என்னும் திரைப்படத்தில் முதன்மைக் கதாநாயகியரில் ஒருவரான ஜோதிகா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.