5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Samit Dravid: இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்த டிராவிட் மகன்.. ஐபிஎல் 2025ல் களமிறக்க திட்டமா..?

India Under-19 squad: கர்நாடகாவில் நடைபெற்ற மகாராஜா டி20 டிராபி போட்டியிலும் விளையாடினார். மகாராஜா டிராபியில் சமித் டிராவிட் சிறப்பாக விளையாடாத போதிலும், ராகுல் டிராட்டின் மகன் என்பதற்காக இடம் கிடைத்ததாக பேசப்பட்டு வருகிறது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த சமித் டிராவிட் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 114 ஸ்டிரைக் ரேட்டில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 31 Aug 2024 20:48 PM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகஸ்ட் 31ம் தேதியான இன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பல வடிவ தொடரின் அட்டவணையுடன் இந்திய அண்டர் 19 அணியையும் அறிவித்தது. இந்தியா - ஆஸ்திரேலியான இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர் செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது.

1 / 7
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் முதன்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் மற்றும் 2 நான்கு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2 / 7
உத்தரப்பிரதேசத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது அமான் 50 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தின் சோஹம் பட்வர்தன் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்கு தலைமை தாங்குகிறார்.

3 / 7
சமித் டிராவிட் சமீபத்தில் தனது முதல் சீனியர் ஆண்கள் டி20 போட்டியிலும், கர்நாடகாவில் நடைபெற்ற மகாராஜா டி20 டிராபி போட்டியிலும் விளையாடினார். மகாராஜா டிராபியில் சமித் டிராவிட் சிறப்பாக விளையாடாத போதிலும், ராகுல் டிராட்டின் மகன் என்பதற்காக இடம் கிடைத்ததாக பேசப்பட்டு வருகிறது.

4 / 7
மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த சமித் டிராவிட் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 114 ஸ்டிரைக் ரேட்டில் 82 ரன்கள் எடுத்துள்ளார். இதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மட்டும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

5 / 7
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் 3 ஒருநாள் போட்டிகளிலும், அதை தொடர்ந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளிலும், சென்னையில் 2 நான்கு நாள் ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

6 / 7
ஐபிஎல்லில் சமித் டிராவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பிசிசிஐ விதிகளின்படி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் எந்த ஒரு போட்டியிலும் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், சமித் டிராவிட் கர்நாடக சீனியர் அணிக்காக எந்த பெரிய போட்டியிலும் விளையாடாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை.

7 / 7
Follow Us
Latest Stories