5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஆசையா..? இவற்றை தவறாமல் பின்பற்றுங்கள்..!

Rainy Season: மழைக்காலத்தில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில் வெளியில் விற்கும் கடை உணவுகளை உண்ணாமல், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. வெளி உணவுகளை சாப்பிடும்போது மழை காலத்தில் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 13 Oct 2024 18:31 PM
பெரும்பாலான மக்கள் பருவமழையை வரவேற்க தயாராகிவிட்டார்கள். பருவ மழை காலம் தொடங்கியதும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் நம்மை நோக்கி படையெடுக்க தொடங்கிவிடும். திடீரென வெயில் அடிக்கும், திடீரென மழை பெய்யும். இப்படி வானிலை மாறிக்கொண்டே இருப்பது போல், நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில மாற்றங்களை  செய்ய வேண்டியது நல்லது.

1 / 6
மழைக்காலத்தில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில் வெளியில் விற்கும் கடை உணவுகளை உண்ணாமல், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. வெளி உணவுகளை சாப்பிடும்போது மழை காலத்தில் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.

2 / 6
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கிவிட்டது. எனவே, இன்று முதல் உங்கள் வீடுகளில் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது. இதன்மூலம், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மழை காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

3 / 6
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. உதாரணத்திற்கு, வெளியே போயிட்டு வந்தவுடன் கை, கால்களை கழுவுதல், குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவ பரிந்துரைக்க வேண்டும்.

4 / 6
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் உள்ளன. இது மக்களுக்கு வடிகட்டிய தண்ணீரை கொடுக்கும். சுத்திகரிப்பு கருவிகள் இல்லாத வீடுகளில் கொதிக்கவைத்த தண்ணீர் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துவது நல்லது. இது வயிற்றுப்போக்கு, சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

5 / 6
மழைக்காலம் தொடங்கி விட்டதால் எப்போது மழை வரும், வெயில் அடிக்கும் என்பது நமக்கு தெரியாது. எனவே, அலுவலகம் அல்லது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது குடை, ரெயின் கோட் போன்றவற்றை கொடுத்து அனுப்புவது நல்லது. அதேபோல்,  நீங்களோ அல்லது குழந்தைகளோ மழையில் நனைந்தால், முதலில் நீங்கள் உங்கள் ஆடைகளை மாற்றி, உங்கள் தலைமுடியை நன்றாக துவட்டுங்கள். உடனடியாக மின்விசிறி, கூலர் அல்லது ஏசி முன்பு போய் நிற்காதீர்கள்.

6 / 6
Latest Stories