அதிசயமே அசந்து போகும் அழகி ஐஸ்வர்யா ராய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Actress Aishwarya Rai: கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் புஷ்பவள்ளி & கல்பனா என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1998ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் மற்றும் நாசர் இரட்டை கதாபாத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம். இதில் மதுமிதா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்ட வெற்றி திரைப்படமாகும்.