பொதுவாக சில காரணங்களால் அவ்வப்போது சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தி வரும். அதிலும் குறிப்பாக பயணம் செய்பவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகம் இருக்கும். மேலும் கர்ப்பிணி பெண்களும் தொடர்ந்து வாங்கி எடுப்பார்கள். வாந்தி எடுப்பதால் மந்தமான நிலையை ஏற்படுத்தி மயக்கத்தை உண்டாக்கும். வயிற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்கள் வெளியேறாமல் இருந்தால் அவற்றை உடல் வாந்தி மூலம் வெளியேற்றும். வாந்தியை கட்டுப்படுத்தி உடனடியாக நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.