5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

National Cashew Day 2024: அதிக முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? இது உண்மையா?

Cashew: முந்திரியை அதிகளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் கூறுகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் முந்திரி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்துக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2024 08:00 AM
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் தேதி தேசிய முந்திரி தினம் கொண்டாடப்படுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் முந்திரியில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனிஸ், செலினியம், இரும்புச்சத்து உள்ளன.

1 / 6
இந்தநிலையில், முந்திரியை அதிகளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் கூறுகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் முந்திரி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்துக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

2 / 6
முந்திரியில் புரதம், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது  இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானம் மேம்படுத்தும். முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது நாம் சாப்பிடும் அளவை பொறுத்தது.

3 / 6
முந்திரி குறைந்த அளவில் உட்கொண்டால், அது எடையை அதிகரிக்காது. அதிக முந்திரி சாப்பிடுவது எடை அதிகரிக்க செய்யும். அந்தவகையில், உடல் எடையை குறைக்க விரும்புவோர் குறைந்த அளவில் தாராளமாக முந்திரியை எடுத்துக்கொள்ளலாம்.

4 / 6
முந்திரியில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஆற்றலையும், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவி செய்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் எடையைக் குறைக்கும் என்பது உண்மை.

5 / 6
முந்திரியை  சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருப்பதோடு, உங்கள் பசியை கட்டுக்குள் வைத்து, எடையை பராமரிக்கிறது. மேலும், இதில்  உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

6 / 6
Latest Stories