சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்ல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே நேற்று இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.