5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

HBD Riythvika: ஹேப்பி பர்த்டே ரித்விகா… சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பில் அசத்தியிருப்பார். இந்த கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்த்தது. மெட்ராஸ் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து அழகு குட்டி செல்லம், அஞ்சலை, ஒரு நாள் கூத்து உட்பட பல படங்களில் நடித்தார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2024 16:20 PM
சேலம் மாவட்டத்தில் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிறந்தார் நடிகை ரித்விகா. இவர் சென்னையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சையது கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். நடிப்பில் மேல் கொண்ட ஆர்வத்தினால் திரையுலகில் நுழைந்தார்.

1 / 7
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘பரதேசி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்தார்.

2 / 7
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பில் அசத்தியிருப்பார். இந்த கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்த்தது.

3 / 7
மெட்ராஸ் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து அழகு குட்டி செல்லம், அஞ்சலை, ஒரு நாள் கூத்து உட்பட பல படங்களில் நடித்தார்.

4 / 7
கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘கபாலி’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

5 / 7
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டார் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 106 நாட்களைக் கடந்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றினார் நடிகை ரித்விகா.

6 / 7
பிக்பாஸில் வெற்றி அடைந்த பிறகு தமிழ் சினிமாவில் ரித்விகா கொடிகட்டிப் பறப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் படங்கள் பெரிதாக எதுவும் இல்லாமல் அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

7 / 7
Follow Us
Latest Stories