இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானப் படம் ‘பஞ்சதந்திரம்’. இதில் கமல் ஹாசன் உடன், ஜெயராம், ஸ்ரீராம், யோகி சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர். 5 நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றியே இந்தப் படத்தின் கதை உள்ளது.