5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coriander Leaf Benefits: கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி.. செரிமானத்திற்கும் சிறந்த மருந்து..!

Health Tips: கொத்தமல்லியை உணவில் தினசரி எடுத்து கொள்வதன்மூலம் உடலில் இருக்கும் தேவையிலாத கூடுதல் சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றி, உடலை உள்ளிருந்து கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. மேலும், கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவி செய்கிறது. கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக கொத்தமல்லியை எடுத்துக்கொள்ளலாம்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 01 Oct 2024 21:35 PM
கொத்தமல்லி கிட்டத்தட்ட அனைத்து சமையலறைகளிலும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, பல்வேறு மருத்துவ பிரச்சனைகளுக்கும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் முதல் கிரேக்கர்கள் வரை கொத்தமல்லியை மருந்துக்காக பயன்படுத்தினர்.

1 / 6
கொத்தமல்லி உணவுக்கு சுவையை மட்டும் தருவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல நன்மைகளை தரும். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, பி,கே, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துக்கிறது.

2 / 6
செரிமான அமைப்பில் பிரச்சனை உள்ளவர்கள், குடல் நோயால் அவ்வப்போது பாதிக்கப்படுபவர்கள் கொத்தமல்லியை தாராளமாக எடுத்து கொள்ளலாம். இதை உட்கொள்வதன் மூலம் வயிறு கட்டுக்கோப்பாக இருக்கும். மேலும், இது குடல் சம்பந்தமான நோய்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

3 / 6
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்சைம்களை கொத்தமல்லி தருகிறது. மேலும், இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பச்சை கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கிறது

4 / 6
கொத்தமல்லியை உணவில் தினசரி எடுத்து கொள்வதன்மூலம் உடலில் இருக்கும் தேவையிலாத கூடுதல் சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றி, உடலை உள்ளிருந்து கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. மேலும், கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவி செய்கிறது.

5 / 6
கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக கொத்தமல்லியை எடுத்துக்கொள்ளலாம். கொத்தமல்லியில் அதிகளவிலான ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது பித்த கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவி செய்கிறது.

6 / 6
Latest Stories